சீனாவில் 15 வருடங்களாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் மெஸன்ஜர் மூடல்.
சீனாவில் கடந்த 15 வருடங்களாக பிரபலமாக இருந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனத்தின் லைவ் மெஸஞ்சர் வரும் அக்டோபர் மாதத்துடன் மூடப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ஸ்கைப் போன்ற வீடியோ மெஸஞ்சர் பிரபலமானதை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1999 ஆம் ஆண்டு சீனாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது லைவ் மெஸஞ்சரை அறிமுகப்படுத்தியது. அதுமுதல் பல மில்லியன் இணையதள உபயோகிப்பாளர்கள் அந்த மெஸஞ்சரை உபயோகப்படுத்தி வந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் என்னும் வீடியோ சாட்டிங் முறையை அறிமுகபடுத்தியதில் இருந்து லைவ் மெஸஞ்சருக்கான ஆதரவு குறைந்து வந்தது. இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மெஸஞ்சர் சீனாவில் மூடப்படுவதாகவும், சீன இணையதள உபயோகிப்பாளர்கள் இனி ஸ்கைப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் லைவ் மெஸஞ்சர் சீனாவில் மூடப்பட்டாலும், தொடர்ந்து மற்ற நாடுகளில் செயல்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழ்வதும் இந்த மெஸஞ்சரை 330 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக கடந்த 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கூறியுள்ளது.











0 comments:
Post a Comment