தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலையாய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது தான்.
இதற்காக கண்ட கண்ட எண்ணெய், ஹேர் ஆயில்களை வாங்கி பயன்படுத்துவதால் இருக்கின்ற தலைமுடியும் உதிர்ந்து வழுக்கை தலையாகி விடும் நிலை தான் உள்ளது.
எனவே மிக எளிமையாக வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம்.
* வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் பால் கொண்டு ஸ்கால்-களில் நன்குபடும்படி, அலச வேண்டும். இப்படி செய்தால் ஊட்டச்சத்து அதிகம் கிடைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.
* கற்றாழை ஜெல்லை ஸ்கால்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும், பின்னர் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசுவதால் முடி உதிர்வது குறைவதுடன் வழுக்கை தலையில் முடி வளரும்.
* ஆன்டி பயாடிக் எதிர்ப்பு பொருட்கள் அதிகம் நிறைந்துள்ள வேப்பிலையை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும், நன்கு கொதித்ததும் அந்த தண்ணீரை எடுத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
* நெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இப்படி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
* உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும், ஏனெனில் இதில் சல்பர் நிறைந்துள்ளது.
* செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இது பொடுகுப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
* எலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

0 comments:

Post a Comment

வெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெங்காயத்தை கொண்டு பல்வேறு உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம்.
வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என பல்வேறு வகைகள் உள்ளன.
வெங்காய பச்சடி
வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார்.
பகல் உணவில் இதனை சேர்த்து சாப்பிடலாம்.
பயன்கள்
பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும்.
பக்கவாதம், இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தருவதாக சமீபத்தில் கிங்ஜார்ஜீ மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருகிறது.
இதில் மற்றுமொரு உண்மையாக ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பு
தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

மின்சார விநியோகம் நாளை வழமைக்கு திரும்பும்!- அரசாங்கம்

இலங்கையில் மின்சார விநியோகம் நாளை காலை முதல் வழமைக்கு திரும்பும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித சியம்பலாபிட்டிய இதனை அறிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் நிலையிலேயே இந்த இயல்பு நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்சார மையத்தின் தன்னியக்க உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினையே மின்சார தடைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது நாட்டில் நேர அட்டவணையின்படி நாளொன்றிற்கு ஏழரை மணிநேர மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது?

பெர்முடா முக்கோணத்தில் மறந்திருக்கும் மர்மம் குறித்து அறிவியல் ஆய்வாளார்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பெர்முடா முக்கோணத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அந்த பகுதியில் ஏன் கப்பல்களும் விமானங்களும் மாயமாகிறது என எவராலும் கண்டுபிடித்து கூற முடியவில்லை.
முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
நோர்வேயின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Barents Sea-ன் கடற்பகுதியின் அடித்தட்டில் பாரிய எரிமலைவாய்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே நோர்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன.
எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்றதொரு காரணங்களால்தான் பெர்முடா கடற்பகுதியிலும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனினும் இதனை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Send
 

0 comments:

Post a Comment