22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.....
1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் "இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.
உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.
10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.
# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

சிறந்த இயக்குநர் விருதை இவருக்கு தாங்க..! (BACK TO THE FUTURE)


1989-இல் வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் 'பேக் டு தி ஃப்யூச்சர்'. அதில் காட்சிப்படுத்தபட்ட பல கருவிகளையும், 'எதிர்கால' தொழில் நுட்பங்களையும் கண்டு " இது மாதிரிலாம் இருக்குமா என்ன..?!" என்று மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். 



போன் கிளாசஸ் : 1989-ல் சிரிப்பை உண்டாக்கிய இந்த போன் கிளாசஸ் தான் இப்போது கூகுள் கிளாஸ் ஆக உருவாகி நிற்கிறது..!









டோர் வித் ஃபிங்கர் பிரிண்ட் ரிகக்னிஷன் : இதுபோன்ற பாதுக்கப்பான கதவுகள் இப்போது ரொம்ப சகஜம்..!





மார்ட்டி மெக்ஃப்ளை செல்ப்-லேசிங் ஷூ : தானாகவே லேஸ் மாட்டிக் கொள்ளும் இது போன்ற ஷூக்களை பல நிறுவனங்கள் தாயாரித்து கொண்டே தான் இருக்கின்றார்கள்..!

டிவி வீடியோ கால்ஸ் : இந்த காலத்துல இதுக்கு பெயர் - ஸ்கைப் கால்ஸ்..!



டேப்லட்ஸ் : இதை பற்றி சொல்லவே வேண்டாம். வகை வகையாக வந்துகொண்டே இருக்கிறது டேப்லட்கள்..






3டி மூவி ஐடியா : சினிமா உலகமே இப்போது 3டி-யில் தான் மூழ்கி உள்ளது என்பதை சொல்லவே வேண்டாம்..!

0 comments:

Post a Comment

வை-பை ரவுட்டர் மூலம் இண்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி.?

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இண்டர்நெட் மூலமாகவே இணைக்கப்பட்டுள்ளனர். எங்கும் இண்டர்நெட் எதற்கும் வை-பை என சுழன்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென வீட்டு வை-பை சரியாக வேலை செய்யாமல் போகும். சும்மாவே இக்காலத்து இளசுகளின் ரத்தம் சூடாகும், இதில் வை-பை வேகம் குறைந்தால் சொல்லவே வேண்டாம், அவங்க அப்படியே டென்ஷனாகிடுவாங்க.. இந்த மாதிரியான நேரங்களில் அதிக சூடாகாமல் வை-பை வேகத்தை எப்படி அதிகரிப்பது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

ரீபூட் ஷெட்யூல் பெரும்பாலும் புதிய ரவுட்டர்களை ரீபூட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, எனினும் இண்டர்நெட் வேகம் குறையும் போது ரீபூட் செய்வது நல்ல பலன்களை தரும்.

சேனல் விட்த் பொதுவாக ரவுட்டர்களில் 20MHz மற்றும் 40MHz என இரு விட்த் செட்டிங்ஸ் இருக்கும், வேகம் குறையும் போது இவைகளை மாற்றியமைத்தால் ஸ்ட்ரீமிங் அல்லது தகவல்களை பறிமாற்றம் செய்யும் வேகம் அதிகரிக்கும்

அப்டேட் மற்ற மின்சாதன கருவிகளை போன்றே ரவுட்டர்களையும் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும்

0 comments:

Post a Comment

இந்த (ஜூலை) மாதம் – ஹாலிவுட் படங்களின் மாதம்

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் மார்க்கெட் கொண்ட படங்கள் என்று ஹாலிவுட் படங்களைத் தாராளமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்து வசூலில் சக்கைப் போடு போட்ட ஜுராசிக் வேர்ல்ட் படம் அதற்கு ஒரு உதாரணம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளதால் நாம் கண்டிப்பாக இந்தப் பட்டியலை வெளியிட வேண்டியது அவசியமாக இருக்கிறது, இந்த ஜூலை மாதம் அதிரடி ஆக்க்ஷன் படங்கள், டிராமா கலந்த படங்கள் மற்றும் நகைச்சுவை படங்கள் என்று ,எல்லாம் கலந்து கட்டி இந்த முறை ஹாலிவுட் படங்கள் வெளிவருகின்றன. மொத்தம் 10 ஹாலிவுட் படங்கள் வெளிவருகின்றன, எந்தப் படம் எந்தத் தேதியில் வெளியாகிறது என்று பார்க்கலாம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் ஏற்கனவே டெர்மினேட்டர் படங்கள் 4 பாகங்கள் வந்து வெற்றி பெற்றுள்ளன, இதில் 3 பாகங்களில் அர்னால்ட் படத்தின் நாயகனாக நடித்து இருந்தார். தற்போது 5 வது பாகமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தின் மூலம் உள்ளேன் ஐயா என்று சொல்லி படத்தில் நடித்திருக்கிறார்.அறிவியல் கலந்த 

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் வெளியாகும் அதே நாளில் மற்றொரு படம் மேஜிக் மைக் XXL, நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சானிங் தடம், மேட் போமர் ஆகியோர் சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்து நடித்திருக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து வெற்றி பெற்ற மேஜிக் மைக் திரைப்படத்தின் அடுத்த பாகமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் ஜூலை 3 அன்று 

மினியன்ஸ் ஜூலை 10 தேதி திரைக்கு வர இருக்கும் படம் மினியன்ஸ், டிஸ்பிகேபிள் மீ, டிஸ்பிகேபிள் மீ 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளிவரும் படம் மினியன்ஸ். அனிமேஷன் படமாக எடுக்கப் பட்டுள்ள மினியன்ஸ் திரைபடத்தில் சான்ட்ரா பல்லாக் மற்றும் ஜான் 

ஆன்ட் மேன் ஜூலை 17 ம் தேதி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ஆன்ட் மேன். ஹாலிவுட் நடிகர் பால் ரட் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆன்ட் மேன், ஒரு சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து ஸ்பைடர்மேன் வரிசையில் உருவாக்கப் பட்டிருக்கும் படமாகும். ஆன்ட் மேன் படத்தின் 

பிக்செல் ஜூலை 24 ம் தேதியில் சோலோவாக படம் வெளியாகிறது, நோ காம்படிஷன். அறிவியல் கதையான இதில் காமெடியும் கலந்து எடுத்திருகிறார்கள், ஆதம் சான்ட்லேர், கெவின் ஜேம்ஸ் மற்றும் பீட்டர் டின்க்லேஜே போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

ஷங்கருக்காக ரஜினிக்கு வில்லன் ஆகும் 'சீயான்' விக்ரம்?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள எந்திரன் 2 படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஷங்கர். இந்நிலையில் அவர் ஐ பட வேலைகளில் ஆண்டுக் கணக்கில் பிசியானதால் எந்திரன் 2 வேலைகளை துவங்க முடியவில்லை. ஐ ரிலீஸானதை அடுத்து எந்திரன் 2 படத்தை துவங்க உள்ளார் ஷங்கர்.

0 comments:

Post a Comment

3 நாளில் 25 கோடியைத் தொட்டது பாபநாசம்

சென்னை: கமல்- கவுதமி நடிப்பில் கடந்த வரம் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் வசூலில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கமலின் நடிப்பில் பாபநாசமாக உருவெடுத்தது. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 750க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடியை வசூலித்து சாதனை புரிந்த பாபநாசம் இந்த மூன்று நாளில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 16 கோடியை பாபநாசம் வசூலித்து இருக்கிறது, நான்காவது நாளான இன்று 4 கோடி ரூபாய் வரை படம் வசூலிக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும் நாளைக் காலையில் தான் படத்தின் மொத்த வசூல் நிலவரம் எவ்வளவு என்று சரியாகத் தெரியவரும். வசூலில் இதே வேகத்தில் சென்றால் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை, பாபநாசம் தட்டிச்செல்லக்கூடும்.

0 comments:

Post a Comment

கனிமொழியை நம்பி சரணடைந்த புலிகள்.. கருணாநிதி பதில் சொல்வாரா? ஓ.பி.எஸ். கேள்வி

தி.மு.க. எம்.பி. கனிமொழியை நம்பி விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக கொல்லப்படுவதற்கு கருணாநிதியின் செயல்கள் தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்கள். தனது உண்ணாவிரத நாடகத்திற்குப் பின்னர், இலங்கை தமிழர்களுக்கெதிரான போரை இலங்கை அரசு நிறுத்திக் கொண்டது என்ற கருணாநிதியின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளி வந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை யாரும் மறந்திட முடியாது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் இறுதிப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ந் தேதி இரவு 8 மணிக்கு புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை பகுதி அரசியல் பிரிவு தலைவர் சசிதரன் சேட்டிலைட் தொலைபேசி மூலம் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது விடுதலைப் புலிகளை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் தருவதாக கனிமொழி பேசியதாகவும், அதை நம்பியே சசிதரனும் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளும், மே மாதம் 18ஆம் தேதி சரணடைந்தனர் என்றும் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாரே! இந்தக் குற்றசாட்டுக்கான பதிலை கருணாநிதி முதலில் தெரிவிக்கட்டும். அதை விடுத்து கற்பனையான குற்றசாட்டுகளை தமிழக அரசு மீது தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

ஜிவி பிரகாஷ் ஒரு ஐட்டம்!- 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ட்ரைலர் வெளியீட்டில் பார்த்திபன் கிண்டல்!

பல திறமைகளைக் கொண்ட ஜிவி பிரகாஷ் ஒரு ஐட்டம் என்று கிண்டலடித்தார் இயக்குநர் பார்த்திபன். கேமியோ பிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி எஸ் தாணு, இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ், பார்த்திபன், விஜய், கொம்பன் இயக்குனர் முத்தையா , பாடலாசிரியர் நா.முத்துகுமார். தயாரிப்பாளர்கள் கேஇ ஞானவேல் ராஜா, திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சிவி குமார், 2டி எண்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். தாணு1/7 தாணு படத்தை பற்றி தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கூறும்பொழுது, "இயக்குனர் ஆதிக் மிகவும் திறமைசாலி, த்ரிஷா இல்லனா நயன்தாரா கதையை சில வருடங்களுக்கு முன் என்னிடம் கூறினார். அப்பொழுது என் நிறுவனத்தின் கீழ் சில படங்கள் தயாரித்து வந்ததால் என்னால் இப்படத்தை தயாரிக்க இயலவில்லை. இப்படத்தை சிஜெ ஜெயகுமார் தயாரிக்க முடிவு செய்தது மிக நேர்த்தியானது, என்றார்.



0 comments:

Post a Comment

சிரியாவில் 25 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற சிறுவர்கள்: ஐஎஸ்ஐஎஸ் 'திடுக்' வீடியோ

ராக்கா: சிரியாவில் உள்ள பால்மிரா நகரில் 25 ராணுவ வீரர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள பால்மிரா நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் கைப்பற்றினர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பால்மிரா நகரில் வைத்து சிரியா ராணுவ வீரர்கள் 25 பேரை கொலை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ராணுவ வீரர்களின் கைகள் கட்டப்பட்டு வரிசையாக மண்டியிட வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னால் பதின்வயதில் இருக்கும் 25 சிறுவர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். முகத்தை கருப்புத் துணியால் மறைத்திருக்கும் சிறுவர்கள் தீவிரவாதி ஒருவர் கூறியதும் ராணுவ வீர்களை தலையில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் யுனெஸ்கோ பாரம்பரிய தலமான பால்மிரா நகரில் நடந்துள்ளது. பால்மிரா நகரை கைப்பற்றியதும் தீவிரவாதிகள் அங்கிருந்த அருங்காட்சியகத்திற்குள் புகுந்து பழமை வாய்ந்த சிலைகள் பலவற்றை உடைத்து சேதப்படுத்தினர். 25 ராணுவ வீரர்கள் பால்மிரா நகரில் உள்ள ரோமன் ஆம்ஃபிதியேட்டரில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அதே இடத்தில் வைத்து தான் தீவிரவாதிகள் 20 ஆண்களை கொலை செய்தனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

மீன், சோயா, சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஜப்பானியர்கள் பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்களின் பாரம்பரிய உணவுகளாவன: க்ரில் மீன், அளவான சாதம், வேக வைத்த காய்கறிகள், ஒரு பௌல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவை தான். மேலும் ஜப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது மிகவும் அரிது.

ஜப்பானியர்கள் சமைக்கும் போது மிதமான தீயில் தான் உணவை சமைப்பார்கள். இதனால் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கும். மேலும் இவர்களும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களான ஆலிவ் ஆயிலைத் தான் சமையலில் பயன்படுத்துவார்கள்.

ஜப்பானிய ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு அவர்கள் சிறிய பௌலில் உணவைக் கொடுப்பதோடு, அந்த அளவான உணவிலேயே வயிறு நிரம்பிவிடும். இதற்கு அவர்கள் உணவை அலங்கரித்து பரிமாறுவது தான். மேலும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுவார்கள். இதனால் செரிமான மண்டலம் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு, பிட்டாக இருக்க உதவுகிறது.



0 comments:

Post a Comment

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்



பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.
பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?
பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.
Karaoke Software என்றால் என்ன?
சாதாரண மக்கள் – பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.
Karaoke Software இன் திறன் என்ன?
Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்… இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.
Karaoke Software இன் அடிப்படை  என்ன?
இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.
சில Karaoke Softwares
Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.
Sony Sound Forge Pro 10:
இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.
Adobe Audition CS6:
இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.
மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.
இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.
AV Music Morpher Gold 5
இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial  இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,
Home Page: musicmorpher.com
Download: Cloud (10 MB) or Direct
இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.
விரும்பினால் கீழே crack இனை பெற்று பயன்படுத்துங்கள்.
music_morpher_gold_crack_ONLY: Cloud (61 KB)

    0 comments:

    Post a Comment

    உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் என்பதை தெரிஞ்சுக்கனுமா?

    Trace Your facebook friends worldwide using google map. Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் மாய உலகம். கண்ணால் காணாமலே நட்பு பாராட்டும் இடம். இதில் பலருக்கு அவர்களின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்பொழுது அதையும் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.
    இந்த வசதி Google ண் உதவியுடன் வழங்கப் படுகிறது. இதற்கு பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்




    http://apps.facebook.com/nearbyfriends/

    0 comments:

    Post a Comment

    2038 இல் கணினிகள் செயலிழக்க வாய்ப்பு

    y2k
    உலகம் முழுவதும் கணினி மயமாகியிருக்கும் இந்த நூற்றாண்டில் கணினிகள் செயலிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2038 ஆம் ஆண்டில் பெரும்பலான கணினிகள் செயலிழக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினிகளில் நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்பமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
    1938 மார்ச் 19 ஆம் திகதி கிறீனிச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை Year 2038 Problem என நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பெரும்பாலான கணினிகளின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் 32 பிட் சிஸ்டம் முறைமையிலேயே இயங்குகின்றன. 32 பிட் இன்டிஜர்( 32-bit integer )முறையில் அதிபட்சமாக 2,147,483,647 வினாடிகளையே கணக்கிட முடியும். இத்தகைய 32 பைட் சிஸ்டம் கணினிச் செயன்முறைகளில் ஆரம்ப நேரமானது 1970 ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 00.00 மணியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2038 மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3.14 மணியாகும்போது 1970 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து  2,147,483,647  வினாடிகள் கடந்துவிடும்.
    அதன்பின் நேரத்தை சரியாக கணக்கிட முடியாமல் 32 பிட் சிஸ்டம் கணினிகள் செயலிழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் 64 பிட் சிஸ்டம் முறைமைக்கு கணினிகளின் மென்பொருட்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே யூ ரியூப் இணையத்தளம் இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு 64 பிட் சிஸ்டத்துக்கு மாறியிருந்தது.

    0 comments:

    Post a Comment

    Skype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள் !




    ஸ்கைப் (Skype) ஊடான மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புக்கள் அனைத்தையும் ஒலி-ஒளி வடிவமாக உயர் தரத்தில் (HD) பதிந்துகொள்ள (Record) உதவும் ஒரேயொரு சிறந்த மென்பொருளையே இன்று நீங்கள் தரவிறக்கப்போகிறீர்கள்.

    சிறப்பம்சங்கள்.

    வீடியோ கோல்களை நேரடியாக உங்கள் கணனியில் பதிந்துகொள்ள முடியும். ( ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் அழைப்புக்களையும் பதிந்துகொள்ள முடியும்! )
    screen sharing இன் போதும் வீடியோவை பதிந்துகொள்ள முடியும். ( இது ஒன்லைன் கல்வியின் போது பயண்படும்)
    தன்னியங்கி அழைப்பு பதிவு. (Automatic call recording )
    தானியங்கி சட்டிங் பதில் அளிப்பு. (Automatic chat reply)
    அளவு :10.6 MB

    தரவிறக்க :Download Here

    0 comments:

    Post a Comment

    YOUTUBEஇல் வீடியோக்களை பார்க்க இனி இணைய இணைப்பு தேவையில்லை


    கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோவை பார்க்கும் புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
    வீடியோக்களை ஒன்லைன்னில் பார்க்கும் அவை 48 மணி நேரத்திற்கு சேமித்து வைக்கப்படும். அதன்படி எதிர்வரும் 48 மணிநேரங்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்வையிட முடியும். ஆனால் Mobile App மூலம் பார்ப்பவர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
    பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த வசதி காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ”இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்” என்றார்.
    மேலும், இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலகளவில் யு டியூபுக்கு இந்தியா 5ஆவது பெரிய சந்தையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

    0 comments:

    Post a Comment

    தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

    மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில்
     அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது
    இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது
     என்று பார்ப்போம்.

    சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு
     உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே
     கூடாது.

    உங்கள் போனில் இருந்து பாட்டரிசிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை
     முதலில் கழட்டி விடவும்பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு 
    வெளி பாகங்களை துடைக்கவும். 

    உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் 
    ஆவியாகி விடும்.

    Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம்உங்கள் வீட்டில் அரிசி வைத்து
     இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி
     முழுவதுமாக மூடி விடவும்இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் 
    ஈர்க்கப்பட்டு விடும்ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).
     அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க
     முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

    போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட 
    பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும்பெரும்பாலும் ஆன் ஆகிவிடும்
    இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி 
    செய்யவும்அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகேபேட்டரி பிரச்சினை,
     அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்

    0 comments:

    Post a Comment