எதிர்காலத்தில் கணினிகளை இயக்க பயன்படவுள்ள சாதனம் இதுதான்

news_30361
எதிர்காலத்தில் மவுசுக்கு பதிலாக கணனியை கையாள்வதற்கு முப்பரிமாண தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், கையில் அணியக்கூடியதுமான சாதனம் பயன்படுத்தப்படவுள்ளது.
இச்சாதனத்தை அணிந்து கொண்டு விரல்களை அசைப்பதன் ஊடாக கணனியை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.
இதில் Accelerometer, Magnetometer மற்றும் Gyroscope (ஒரே இடத்தில் நிறுத்தி சுழல வைக்கும் துணைச்சாதனம்) என்பன இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இதனை தொடுதிரைகளில் பயன்படுத்தமுடிவதுடன், ஸ்வைப் (Swipe) முறையில் வலது, இடது பக்கங்களுக்கு இலக்குகளை நகர்த்த முடியும்.
Wyoming பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Anh Nguyen மற்றும் Amy Banic என்பவர்களால் இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சாதனத்தை முப்பரிமாண இலக்குகளின் பயன்படுத்தும்போது 1 mm அளவில் அமைவிட வழு ஏற்படும் என இதனை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

விண்டோஸ் 7 இல் காணப்படும் சில முக்கியமான அம்சங்கள்

windows_7
இன்றைக்கு விண்டோஸ் 7 ஆனது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம். மேலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன.
இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undo cumented Features எனச் சில உண்டு. இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். இதோ அவற்றை பற்றி இங்கு சிறிது பார்க்கலாம்
புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும். கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும். திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும்.
இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை: விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.
அதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.

0 comments:

Post a Comment

கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படம் டவுன்லோடு. டென்மார்க்கில் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம்.

tvncpqiixzrgxno64fw5
தற்போதுள்ள இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு திரைப்படம் நமது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.
டென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இண்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இண்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
1GB அளவுள்ள திரைப்படம் ஒன்றை டவுன்லோடு செய்ய 0.2 வினாடிகள் போதும். இதற்கு முன்பு 32 டெராபிட்ஸ் இண்டர்நெட் வேகம்தான் இதுவரை உலகிலேயே அதிக வேகமுள்ள இண்டர்நெட் திறனாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு 43 டெராபிட்ஸ் வேக இண்டர்நெட் சேவை அறிமுகமாகவுள்ளது. இண்டர்நெட் சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகளே இதுபோன்ற அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுக காரணம் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

ஒன்லைனில் கார்பன் டைட்டானியம் ஸ்மார்ட் போன்

phone
கார்பன் நிறுவனம் டைட்டானியம் S99 கைபேசியை அறிமுகப்படுத்திய பின்னர், கார்பன் அதன் டைட்டானியம் பிராண்டை விரிவாக்கம் செய்து டைட்டானியம் S19 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தி ஆன்லைன் சில்லறை வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய கார்பன் வலைத்தளத்தில் டைட்டானியம் S19 பற்றி பட்டியலில் இல்லை என்றாலும், ஒரு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து ரூ.8,999 விலையில் தற்போது கிடைக்கிறது. இன்னமும், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை.
ஆன்லைன் சில்லறை பட்டியல் படி, கார்பன் டைட்டானியம் S19 இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஒரு HD OGS ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வருகிறது மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு ஆதரிக்கிறது. டைட்டானியம் S19 ஸ்மார்ட்போனின் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் 3G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். ஹோம்ஷாப்18 பட்டியலின் படி, கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போன் 2000mAh லி-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.
கார்பன் டைட்டானியம் S19 போன்றே, கார்பன் ஓபியம் N7 மற்றும் ஓபியம் N9 இரட்டை சிம் ஸ்மார்ட்போன்கள் சென்ற மாத தொடக்கத்தில் ஆன்லைன் சில்லறை வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஓபியம் N7 ரூ. 5,999 (MRP ரூ. 6,390) விலையிலும், ஓபியம் N9 ரூ. 8,999 (MRP ரூ. 9,990) விலையிலும் உள்ளது.
கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:
இரட்டை சிம்,
720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஒரு HD OGS ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
ரேம் 1GB,
1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,
எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு,
3G,
Wi-Fi 802.11 b/g/n,
ப்ளூடூத் 4.0,
ஜிபிஎஸ்,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
2000mAh லி-அயன் பேட்டரி.

0 comments:

Post a Comment

USB இன்டர்நெட் டொங்கிளை எந்த சாதனமும் இன்றி wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி?

dong
நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும். அதற்கான தரவுச்சுட்டி கீழுள்ளது
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்.
vir-300x233
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

காப்புரிமை வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் சாம்சங்!!

samsung
மொபைல் உலகின் ஜாம்பவானாகளான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கும் இடையேயான காப்புரிமை முறைகேடு வழக்குகளை முடிவுக்கும் கொண்டு வர இரு நிறுவனங்களும் முன்வந்துள்ளது.
இதனால் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டு சாங்சங் நிறுவனத்தின் மீது முறைகேடாக தங்களது தயாரிப்புகளை பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆசிய, வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் சுமார் 13 நாடுகளின் நிதிமன்றங்களில் இது தொடர்பான வழக்ககுகளை தொடுத்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின்எ தயாரிப்புகளை, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்களில் முறையற்ற வகையில் பயன்படுத்தி உலக நாடுகளில் விற்பனை செய்ததாகவும், இதனால் தனது வர்த்தகத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு நஷ்டஈடு சாம்சங் நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.
அமெரிக்க நிதிமன்றத்தின் இது தொடர்பாக வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், அமெரிக்காவை தவிர பிற நாடுகளில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment

Oppo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்

oppo
Oppo நிறுவனம் மலேசிய சந்தையில் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான, நியோ 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo நியோ 5, இப்போது விலை விவரங்கள் இல்லாமல் நிறுவனத்தின் வளைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், Soyacincau நியோ 5 ஸ்மார்ட்போன், MYR 598 (சுமார் ரூ .11,500) விலை என்று கூறியுள்ளது. மற்றும் மலேஷியாவில் அடுத்த வாரம் தொடங்கி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இப்போதைக்கு, நியோ 5 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் அறிவிக்கப்படும் என்பது பற்றி எந்த வார்த்தையும் நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
Oppo நியோ 5 ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் ColorOS ஸ்கின் கொண்ட ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகிறது. ஸ்மார்ட்போன் ஒற்றை சிம் அல்லது இரட்டை சிம்களை ஆதரிக்கிறதா என்பதை பற்றி எந்த வார்த்தையும் இல்லை. Oppo நியோ 5 ஸ்மார்ட்போன், LTE ஆதரவுடன் வருகிறது. இது 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே வருகிறது மற்றும் 218ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது.
பிரபலமான மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் போன்றே, நியோ 5 ஸ்மார்ட்போன் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது. Oppo நியோ 5 ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் மற்றும் BSI CMOS சென்ஸார் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
Oppo நியோ 5 இணைப்பு விருப்பங்கள், 4G LTE, 3G, Wi-Fi, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 1900mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 132×65.8×9.2mm மெஷர்ஸ் மற்றும் 132.5 கிராம் எடையுடையது.
Oppo நியோ 5 ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
218ppi பிக்சல் அடர்த்தி,
ரேம் 1GB,
1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்,
microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
4G LTE,
3G,
Wi-Fi,
ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ்,
மைக்ரோ-USB,
ப்ளூடூத்
ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
1900mAh பேட்டரி,
132.5 கிராம் எடை.

0 comments:

Post a Comment

இதோ குறைந்த விலையில் ஒரு ஸ்மாரட்போன்

intex
இன்டெக்ஸ் நிறுவனம் திங்களன்று தனது முதல் ஃபயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போனான கிளவுட் எஃப்எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1,999 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் நிறுவனம் ஸ்மார்ட்போனை ரூ. 2,000 விலையின் கீழ் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக சில்லறை விற்பனை கூட்டாளரான Snapdeal வழியாக இப்போது கிடைக்கிறது.
இந்தியாவின் மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் Flipkart, Snapdeal மற்றும் அமேசான் வழியாக ரூ. 2,000 ரூபாய்களுக்கும் மேல் கிடைக்கும். ஆனால் இன்டெக்ஸ் கிளவுட் எஃப்எக்ஸ் ஸ்மார்ட்போன், இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்போனாகும் என்று நிறுவனங்கள் கூறுவது சிறப்பம்சமாகும். குறிப்பாக, ஸ்பைஸ் நிறுவனம் ஜூன் மாதத்தில் ஃபயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. மற்றும் இந்த வார தொடக்கத்தில் ஸ்பைஸ் ஃபயர் ஒன் Mi-FX 1 ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 29 ம் தேதி ரூ. 2,299 விலையில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இன்டெக்ஸ் கிளவுட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 320×480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேம் 128MB உடன் இணைந்து 1GHz ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. Snapdeal பட்டியல் படி இதில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.
மைக்ரோSD அட்டை வழியாக 4GB வரை விரிவாக்கக்கூடிய 46MB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இணைப்பு விருப்பங்கள் ஜிபிஆர்எஸ் / எட்ஜ், Wi-Fi, மைக்ரோ-USB, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். இன்டெக்ஸ் கிளவுட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 104 கிராம் எடையுடையது மற்றும் 115.9×62.11.8mm பரிமாணங்கள் கொண்டுள்ளது. இதில் 1250mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
இன்டெக்ஸ் கிளவுட் எக்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
320×480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA டிஸ்ப்ளே,
ரேம் 128MB,
1GHz ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்),
2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
மைக்ரோSD அட்டை வழியாக 4GB வரை விரிவாக்கக்கூடிய 46MB உள்ளடங்கிய சேமிப்பு,
ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
Wi-Fi,
மைக்ரோ-USB,
ப்ளூடூத்,
எஃப்எம் ரேடியோ,
3.5 மிமீ ஆடியோ ஜாக்,
1250mAh பேட்டரி,
ஃபயர்பாக்ஸ் ஓஎஸ்,
104 கிராம் எடை.

0 comments:

Post a Comment

சீனாவில் 15 வருடங்களாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் மெஸன்ஜர் மூடல்.

bdcf87f9dcebca9a2dc681dfa50a5a2a
சீனாவில் கடந்த 15 வருடங்களாக பிரபலமாக இருந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனத்தின் லைவ் மெஸஞ்சர் வரும் அக்டோபர் மாதத்துடன் மூடப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ஸ்கைப் போன்ற வீடியோ மெஸஞ்சர் பிரபலமானதை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1999 ஆம் ஆண்டு சீனாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது லைவ் மெஸஞ்சரை அறிமுகப்படுத்தியது. அதுமுதல் பல மில்லியன் இணையதள உபயோகிப்பாளர்கள் அந்த மெஸஞ்சரை உபயோகப்படுத்தி வந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் என்னும் வீடியோ சாட்டிங் முறையை அறிமுகபடுத்தியதில் இருந்து லைவ் மெஸஞ்சருக்கான ஆதரவு குறைந்து வந்தது. இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மெஸஞ்சர் சீனாவில் மூடப்படுவதாகவும், சீன இணையதள உபயோகிப்பாளர்கள் இனி ஸ்கைப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் லைவ் மெஸஞ்சர் சீனாவில் மூடப்பட்டாலும், தொடர்ந்து மற்ற நாடுகளில் செயல்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழ்வதும் இந்த மெஸஞ்சரை 330 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக கடந்த 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

இ-மெயிலுக்கு இன்று வயது 32….! !(படங்கள், வீடியோ இணைப்பு)

Shiva_ayyaduraiஅமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க்  என்ற ஊரைச் சேர்ந்தவர். இனி அவர் பேசுகிறார்….
“”என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.
நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.
எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.
இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.
தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.
நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.
நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.
அதற்குப் பிறகு “மசாசூஸைட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.
எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல்  இ – மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.
ஆனால் பலர்  தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ – மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.
இ – மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,  1. நான் ஓர் இந்தியன், 2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்பு நிறத்தவன். 5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.
அதற்குப் பின்பு  நான்தான் இ – மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற “சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்’.
இ – மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code  கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.
1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு  ஒரு நாளைக்கு 5000 – 6000 இ-மெயில்கள் வந்தன. அந்த இ – மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுக்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ – மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ – மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ – மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ – மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ – மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.
அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.
பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை  உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.
பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.
எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.
எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான – அதைவிட மேம்பட்ட – பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.
நான் “மசாசூஸைட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.
ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே… 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து “அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்’ (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன.
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்” என்கிறார் சிவா அய்யாதுரை.
அவருடைய கண்டுபிடிப்பான இ – மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, “இன்னோவேஷன் கார்ப்ஸ்’ என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.
“”இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.
இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் – 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்” என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.
“”அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்” என்றார்.
சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி: கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.

0 comments:

Post a Comment

உங்கள் செல்போனில் முக்கிய வசதிகளை அறிய….

cell
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]… !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet

0 comments:

Post a Comment

ஹேக்கர்களை முறியடிக்க ‘ஆப்பிள்’ புதிய வியூகம்


ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்கள் இணையத்தில் கசியவிடப்பட்டதை அடுத்து, தமது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பயனாளிகளை உஷார்படுத்தும் வகையிலான புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகைகள் தங்களது செல்போனில் வைத்திருந்த அந்தரங்க படங்கள், இணையத்தில் ஹேக்கர்களால் முறைகேடாக கசியவிடப்பட்டது. இதனால் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகைகள் கத்தே அப்டான், ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் அந்தரங்க படங்கள் வெளியான இந்த விவகாரம், உலக அளவில் தொழில்நுட்ப ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய வரலாற்றில் இதுபோன்ற அளவில் மோசமான ஹேக்கிங் நடக்கவில்லை என்பதால், இதன் மீதான விசாரணையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் சைபர் பிரிவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.tim_cook_bloomberg_2094148f
இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐ- கிளவுட்’ மற்றும் ‘பைஃன்ட் மை ஐ-போஃன்’ அப்ளிக்கேஷன்களில் பதிவு செய்யப்பட்ட படங்கள் வெளியானதால், ஆப்பிள் நிறுவன கருவிகளின் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் குற்றம்சாட்டினர்.
அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது அடுத்த தயாரிப்பான ஐபோஃன் 6-ஐ அறிமுகம் செய்யும் வேளையில், இந்தக் குற்றச்சாட்டு அந்த நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்பட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனமோ நடிகைகளின் குற்றச்சாட்டை மறுத்தது.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ஹேக்கர்களின் செயல்களை தடுப்பதற்காக ஆப்பிள் சிஸ்டமில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எங்கள் பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளோம்.
கணக்குகளை எவரேனும் ஹேக் செய்ய முயற்சி செய்தால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக இ-மெயில் வழியாகவும், புஷ் நோட்டிபிகேஷன் மூலமாகவும் எச்சரிக்கை செய்தியாக தெரியப்படுத்தப்படும். இந்த ஆலோசனைகள் ஆப்பிள் சேவையின் ஐ-கிளவுட் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
கணக்குகளின் பெயர், கடவுச்சொற்களில் மாற்றம், அல்லது ஐ-கிளவுடிலிருந்து கோப்புகளை வேறு கருவிகளுக்கு மாற்றுவது என அனைத்து விதமான வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தப் பயன்பாடு அளிக்கப்படும்” என்றார்.
விரைவில் ஆப்பிள் ஐ-போஃன் 6 வெளியிடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை தக்கவைக்க ஆப்பிள் நிறுவனம் நடிவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் கணணியில் இலவசமாக WhatsApp மற்றும் Viber போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

WhatsApp _kathiravan
இனி உங்கள் whatsapp மற்றும் viber போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks)  எனும் நிறுவனம் துவங்கியுள்ளது.  இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இனி இந்த இலவச வசதியினை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவலாம் என்பதை விரிவாகக் பார்க்கலாம்.
1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.
4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம்.
5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.
6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில் உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App-னை Android Phone – இல் Install செய்வது போன்று Install செய்து கொள்ளுங்கள்.
7. வரும் பகுதியில் BlueStacks – கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு Pin Number ஒன்று வந்திருக்கும்.
8. Application – ஐ இன்ஸ்டால் செய்து Pin Number – ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.
9. Log – in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App – களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.
இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App – களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.
11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone – ஐ பயன்படுத்த தேவையில்லை.
அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp -னையும் பயன்படுத்த முடியும்.

0 comments:

Post a Comment

Huawei அறிமுகம் செய்துள்ள Ascend Mate7

huawei_ascend2
Huawei தனது புதிய தயாரிப்பான Ascend Mate7 ஐ பேர்லின் நகரில் அறிமுகம் செய்துள்ளது. 6 அங்குல திரையுடன், FHD display கொண்டுள்ளதுடன், மெல்லிய 7.9mm பருமனையும் கொண்டுள்ளது.
அதிகளவு வினைத்திறன் வாய்ந்த ஒக்டா-கோர் புரொசசர் கொண்டமைந்துள்ளது. பற்றரியின் கொள்ளளவு 4100 mAh ஆக அமைந்துள்ளது. fingerprint மற்றும் EMUI 3.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. Huawei அறிமுகம் செய்துள்ள மிகப்பிந்திய ஸ்மார்ட்ஃபோன் வகையாக Ascend Mate7 காணப்படுகிறது.
Huawei நுகர்வோர் வியாபார குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர் யு கருத்து தெரிவிக்கையில், ´எமது வேகமான மற்றும் மிகவும் பெரிய திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் அனுபவம் என்பது நுகர்வோருக்கு ஒப்பிடமுடியாத அனுபவமாக அமைந்துள்ளது. சகல பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு எமது உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அனுபவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பின் அடையாளமாக அமைந்துள்ளது.
Huawei Ascend Mate7 என்பது மிகப்பெரிய திரையையும், நுணுக்கமான வினைத்திறனையும் கொண்டுள்ளதுடன், அதிகளவு வினைத்திறன் வாய்ந்ததாகவும் உள்ளது. ஒற்றை தொடுகை fingerprint தொழில்நுட்பத்தின் காரணமாக, மிகவும் வசதிகரமானதாக அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment

ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது……..

141002114854-apple-icloud-activationlock-620xa
141002114854-apple-icloud-activationlock-620xaபயன்படுத்திய ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது அதனது நிலையை அறிந்து கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளது . அதில் குறித்த சாதனத்தின் IMEI இலக்கத்தை கொடுப்பதன் மூலம் அச் சாதனம்  களவாடப்பட்டதா, இல்லையாபோன்ற நிலைமைகளை அறிந்து கொள்ளலாம் .
https://www.icloud.com/activationlock/

0 comments:

Post a Comment

விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம்

windows10_windows_product_family_9-30-event-100464966-large
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BN-EU230_WIN10S_G_20140930151727
இதுவரை வெளிவந்த விண்டோஸ் பதிப்புக்களிலேயே இதுவே சிறந்தது என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 8 இன் குழப்பமான வடிவமைப்பு என்ற சர்ச்சைகளை அடுத்து இலகுவான இடை முகப்படன் விண்டோஸ் 10 ஐ வெளியிட்டுள்ளது.
windows10_windows_product_family_9-30-event-100464966-large
மேலும் விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் உள்ளது போன்றும் மற்றும் அதன் க்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் உள்ளது போலவும் தோன்றும். அத்துடன் டெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த கூடியதாகவும் விண்டோஸ் 10 இருக்கும் எனவும் அறியமுடிகின்றது.

0 comments:

Post a Comment

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Streamline Version. 2Gயிலும் வேகமான இண்டர்நெட்டை பெறலாம்

d070cbc86d9051998675e6c74aa397ce
கூகுள் நிறுவனம் தற்போது புதிதாக Streamline Version எனப்படும் புதிய புதிய தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஸ்மார்ட் போன்களில் 3G வசதி இல்லாமலேயே மிகவேகமாக நீங்கள் பிரெளஸ் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு போன்களில் 3G வசதியிருந்தால் மட்டுமே ஒருசில பக்கங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் மொபைல்போனில் 3G வசதியை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் இன்னும் பலர் 2G வசதியையே வைத்துள்ளனர். ஆனால் இவர்களால் வேகமான இண்டர்நெட் வசதியை பெறா முடியவில்லை. கூகுள் இந்த குறையை தற்போது போக்கியுள்ளது.
தனது புதிய Streamline Versionஐ இன்ஸ்டால் செய்தால், 2G இண்டர்நெட் வசதியிலேயே மிகவேகமாக 3G போல இணையத்தில் நாம் நினைத்தவற்றை தேட முடியும். இந்த வசதி ஏற்கனவே பல நாடுகளிலும் இருந்தபோதிலும் இந்தியாவில் தற்போதுதான் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இண்டர்நெட் பிரியர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகேவே கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment

i Phone 6 வளைகிறதா? கவலை வேண்டாம். இதோ தீர்வு.. (காணொளி இணைப்பு )

bys_yzyciaidtsd_10
i Phone 6 வளைகிறதா? கவலை வேண்டாம். இதோ மிகவும் இலகுவான செலவு குறைந்த தீர்வு …..


0 comments:

Post a Comment

உலகமே ஒரு வலைப்பின்னல்

the-internet
தேடியந்திரம் என்றதும் கூகிள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கூகிளை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. கூகிளையும் தவிர உள்ள தேடியந்திரங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
இவற்றில் ஷோடன் (Shodan) http://www.shodanhq.com/ ; தேடியந்திரம் முக்கியமானது. ஷோடன் கூகிளுக்கான மாற்று என்றோ ,கூகிளை விட சிறந்த தேடியந்திரம் என்றோ கூற முடியாது. ஷோடன் உண்மையில் வெகுஜனங்களுக்கான தேடியந்திரம் இல்லை. அதில் இணையதளங்களையோ இணைய பக்கங்களையோ தேட முடியாது. எனில் ஷோடன் எதற்காக? ஷோடனில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதங்களை எல்லாம் தேடலாம். அதாவது, வெப்கேம், போக்குவரத்து சிக்னல்கள், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் ,ரவுட்டர்கள் என்று இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தேடலாம். இவ்வளவு ஏன்? மின்நிலையங்கள் போன்றவற்றையும் தேடலாம்- அவை இணைக்கப்பட்டிருந்தால்!.
தேடுவது என்றால், அந்த சாதனங்களில் பின் வாசல் வழி இருக்கிறதா? என அறிந்து அவற்றுக்குள் நுழைவது சாத்தியமா ? என்று அறிவதும் தான். ஆக, ஒரு சாதனம் இணையத்தில் இணைக்கப்பட்டு, அதில் போதுமான பாதுகாப்பு இல்லாம்அல் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இயக்கவும் செய்யலாம்.
இந்த தேடியந்திரம் இரண்டு விஷயங்களை செய்கிறது, இணைய தொடர்பு உள்ள பொருட்களும் சாதனங்களும் உலகில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் அவற்றில் பாதுகாப்பு ஓட்டை இருக்கிறதா ? என்றும் காட்டுகிறது. அதனால் தான் ஷோடனை உலகின் திகிலூட்டும் தேடியந்திரம் என சி.என்.என் அறிமுக கட்டுரை வர்ணிக்கிறது. இணைய உலகின் இருண்ட கூகிள் என்றும் இது வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஷோடனின் நோக்கம் இணைய களவானிகளுக்கு வழிகாட்டுவது அல்ல, இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.
* ஒய்.2.கே -வை நினைவிருக்கிறதா? புத்தாயிரமாவது ஆண்டு பிறக்கும் முன் இணைய உலகமே ஒய்.2.கே பக் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது. பயந்து கொண்டிருந்தது. 1999 ம் ஆண்டு 2000 மாவது ஆண்டுக்கு மாறுவதை 1900 களுக்கு பழக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் அமைப்புகளின் உள் கடிகாரம் புரியாமல் குழம்பி பெரும் பிரச்சனை ஏற்படலாம் என்று எச்சரிக்கையும் அதனால் உண்டான கில் மற்றும் தயார்படுத்தல்களும் நினைவுக்கு வருகிறதா? ஒய்2கே பூதம் புஸ்வானமாகி இருக்கலாம். அல்லது அடக்கப்பட்டிருக்கலாம். இப்போது இந்த கதை எதற்கு என்று நினைக்கலாம். விஷயம் என்ன என்றால் சில மாதங்களுக்கு முன் இணைய உலகை இதோ போல் ஒரு பூதம் பிடித்தாட்டியது. 512 கே என்று சொல்லப்பட்ட அந்த பூதம் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருந்தாலும் என்ன இணைய உலகில் அந்த பூதம் இன்னமும் தூங்கு கொண்டு தான் இருக்கிறது ,எப்போது வேண்டுமானாலும் விழித்துக்கொண்டு தாக்கலாம் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எனவே 512 கே பூத்ததை அறிந்திருப்பது நல்லது.
இணையத்திற்கு என்று ஒரு போக்குவரத்து வரைபடம் இருக்கிறது. ரவுட்டர்களும் , கம்ப்யூட்டர் சாதனங்களும் இணைக்கப்பட்ட பாதைகள் நிரம்பிய வரைபடம் அது. ஒவ்வொரு முறை இணையதில் ஒரு இணைய பக்கத்தை அணுக முற்படும் போது அந்த இணையபக்கத்தில் உள்ள தகவல்கள் இந்த பாதைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டு தான் வந்து சேர்கின்றன. இந்த பாதைகளில் எதை தேர்வு செய்தால் சீக்கிரம் வந்து சேர முடியும் என்ற தேர்வும் நிகழ்கிறது. அதற்கு ஏற்பட ரவுட்டர்களில் திரும்புவது, குறுக்குச்சந்துகளில் பாய்வது போன்ற மாயங்கள் எல்லாம் தானாக நிகழ்கின்றன.
int3
இந்த இணைய போக்குவரத்து நிகழ்வதற்கான பாதைகளும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 512,000 ! அதாவது 512 கே. இணையத்தில் உள்ள ஒவ்வொரு ரவுட்டரும் இந்த பாதைகள் அனைத்தையும் வரைபடமாக தங்கள் நினைவுத்திறனில் சேமித்து வைத்திருக்கின்றன். இந்த வரைபடத்தை பார்த்து தான் சரியான பாதையை ஒவ்வொரு முறையும் தேர்வு செய்கின்றன. இவை எல்லாம் நமக்கு தேவை இல்லாத விஷயம் என நினைக்கலாம். ஆனால், இந்த பாதைகளின் எண்ணிக்கை 512,000 எனும் வரம்பை கொண்டிருக்கின்றன. தேவை எனில் அவற்றை அதிகமாக்க முடியாது. அப்படியே அதிமாக்கினாலும் , பழைய ரவுட்டர்கள் 512 கேவுக்கு மேல் நினைவுத்திறன் இல்லாதவை . போக்குவரத்து அதிகமானால் தினறி மட்டும் அல்ல குழம்பி போகும்.
சில மாதங்களுக்கு முன் இணையத்தில் இப்படி 512 கேவுக்கும் அதிக பாதைகள் உண்டானதால் பல ரவுட்டர்கள் குழம்பி போய் நின்று முக்கிய இணையதளங்கள் தற்காலிகமாக முடங்கின. இந்த பிரச்சனை சரி ஆனாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கின்றன. இணைய போக்குவரத்தில் இணையதளங்களை அடையாளம் காண ஒதுக்கப்படும் ஐபி முகவரி என குறிப்பிடப்படும் இணைய முகவரிகளும் குறிப்பிட்ட வரம்பை கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகமானாலும் இணையவெளியில் பெரும் சிக்கல் தான் என்கின்றனர்.
வெறும் கம்ப்யூட்டர்களும் லாப்டாப்களும் மட்டும் அல்லாமல் இப்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலமும் இணையம் தொடர்பு கொள்ளப்படும் நிலையில் இந்த இரண்டு எண்ணிக்கைகளுமே அதிகரிக்க உள்ளன. ஸ்மார்ட் போன் மட்டுமா, சிப் பொருத்தும் திறன் கொண்ட எண்ணற்ற சாதனங்கள் இணைய நெடுஞ்சாலை பக்கம் வந்து கொண்டிருக்கின்றன.
* கிலவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். தகவல்களை மைய கம்ப்யூட்டரில் சேமிக்காமல், எண்ணற்ற சர்வர்களின் தொகுப்பான மேக பின்னலில் சேர்த்து வைப்பதை தான் கிலவுன் கம்ப்யூட்டிங் என்று புரிந்து கொள்ளலாம். இதே போலவே ஃபாக் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படும் நுட்பம் பற்றி தெரியுமா? வலைப்பின்னல் துறை ஜாம்பவான் சிஸ்கோ உருவாக்கியுள்ள பதம் இது. இன்னமும் வெகுஜன பழக்கத்திற்கு வரவில்லை. ஆனால் விரைவில் வரும்.
கிலவுட் கம்ப்யூட்டிங்கின் நீட்டிப்பு அல்லது அடுத்த கட்டம் என்றும் இதனை சொல்லலாம். மேலும் மேலும் அதிகமான சாதனங்களும் சென்சார்களும் இணையத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் அவற்றில் இருந்து தகவல்கள் சதா சர்வ நேரமும் கிலவுடிற்கு அதாவது வலைப்பின்னலுக்கு அனுப்ப பட்டுக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கண்காணிப்பு காமிராக்களும், வெப்காமிராக்களும் 24 மணி நேரமும் படம் எடுத்து அந்த விவரத்தை வலைப்பின்னலிடம் அளிக்கிறது.
இவை எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை தரம் பிரித்து பகுக்கும் பணி ரவுட்டர்களின் முதுகை ஒடித்து விடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான், எல்லா தகவல்களும் வலைப்பின்னலின் மைய பகுதிக்கு வந்து சேர வேண்டாம் என சிஸ்கோ கருதுகிறது. மாறாக, தகவல்கள் அனுப்படும் முதல் கட்டத்திலேயே ரவுட்டர்களால் அவை தரம் பிரிக்கப்பட்டு வடிக்கப்பட்டு பயனுள்ள தகவல் மற்றும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என சிஸ்கோ சொல்கிறது. இப்படி வலைப்பின்னலின் விளிம்பிலேயே தகவல்கள் வடிகட்டப்படும் ஆற்றல் மற்றும் தேவை தான் ஃபாக் கம்ப்யூட்டங்.
* கூகிள் நிறுவனம் சமீபத்தில் பெளதீக வலை (http://google.github.io/physical-web/ ) திட்டத்தை அறிவித்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பெளதீக வலை என்பது ஒரு ஓபன் சோர்ஸ் திட்டம் . இதை கூகிள் முன்னெடுக்கிறது . ஆனால் அதற்கு சொந்தமானதல்ல. இந்த பெளதீக வலை மூலம் பஸ் நிலையங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை எல்லாமே அவற்றுக்கான தனி இணைய முகவரியை கொண்டிருக்கும். இந்த இடங்கள் அருகே செல்லும் போது அவற்றுக்கு என தனியே எந்த ஒரு செயலியும் ( ஆப்) இல்லாமலே அவற்றில் இருந்தே தகவல்களை பெறலாம். இப்படி இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் பொருட்களுன் தொடர்பு கொள்வதை சிக்கல் இல்லாத அனுபவமாக்க ஒரு பொதுவான அமைபை உண்டாக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

in4
* இணையம் தற்கொலைகளுக்கு அடிகோலியிருக்கிறது . ஆனால் கொலைகளுக்கு நேரடியாக காரணமாக இருந்ததில்லை. இந்த நிலை மாறப்போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் இணைய கொலை இந்த ஆண்டு நிகழலாம் என்று யூரோபோல் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிகரிக்கும் சைபர் குற்றங்களின் விளைவாக இணையம் மூலம் தாக்காளர்கள் உடல்ரீதியான தாக்குதலை நிகழ்த்து உயிரையும் பறிக்கலாம் என இந்த அறிக்கை திகிலூட்டுகிறது. இதுவரை பாஸ்வேர்டு திருட்டு, அடையாள திருட்டு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் சைபர் குற்றவாளிகள் உயிர் பறிக்கும் தாக்குதலை நிகழ்த்தலாம் எனும் அபாயம் மிரள வைக்கலாம். ஆனால் பேஸ்மேக்கர் போன்ற சாதனங்களும் உடல் இயக்கத்தை கண்காணிக்கும் சென்சார்களும் இணையம் மூலம் கட்டுப்படுத்ததப்படும் போது அவை தாக்காளர்கள் கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது தான்.
இந்த இணைய, தொழில்நுட்ப செய்திகள் சொல்வது என்ன? இணையத்தில் காத்திருக்கும் அபாயங்களும், ஆபத்துகளும் அல்ல. அவை பின்விளைவு அல்லது பக்கவிளைவு. அவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு தேவை. தற்காப்பு தேவை. ஆனால் முக்கியமான விஷயம் என்ன என்றால் இணையத்தில் இணைக்கப்படும் சாதனங்களும் பொருட்களும் அதிகமாகி வருவதும், இவை வருங்காலத்தில் மேலும் சகஜமாகி நமது வாழ்க்கை அனுபவத்தையே மாற்ற இருப்பது தான். இணையத்தில் இணைக்கப்படும் இந்த பொருட்கள் – அவை சென்சாராக இருக்கலாம், பிட்னஸ் டிராக்கராக இருக்கலாம், பாதுகாப்பு கருவியாக இருக்கலாம், காட்டில் உலாவும் அரிய ரக மானை கண்காணிக்கும் ரேடியோ அலை டேகாக இருக்கலாம், காற்றில் மாசு உண்டாவதை அளக்கும் சென்சாராக இருக்கலாம் – பொருட்களின் இணையம் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. அதாவது இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ். (‘Internet of Things’ ) . இண்டெர்நெட் ஆப் திங்கிசிற்கு சரியான தமிழ் பதம் காண்பது கொஞ்சம் சிக்கலானது தான். அதே போலவே இந்த பத்திற்கான தெளிவான வரையறையும் கொஞ்சம் சிக்கலானது தான்.
இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தற்போதுள்ள இணைய உள்கட்டமைப்பில், தனியாக அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்களின் பிணைக்கப்பட்ட வலைப்பினல்” என்று விக்கிபீடியா விளக்கம் சொல்கிறது.; http://en.wikipedia.org/wiki/Internet_of_Things ” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது பொருட்கள், விலங்குகள் அல்லது மனிதர்கள் தனியே அடையாளம் காணக்கூடிய டேக் கொண்டு இருப்பதும் , மனிதர்கள் அல்லது கம்ப்யூட்டர்கள் உதவி இல்லாமல் ,தகவல்களை மைய வலைப்பின்னலுக்கு அனுப்பி வைக்க கூடிய சூழல் என்று வாட் ஈஸ் ( http://whatis.techtarget.com/definition/Internet-of-Things) இணையதளம் விளக்கம் சொல்கிறது.

the-internet
’” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தினசரி பெளதீக சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டு தங்களை அடையாளம் காட்டும் திறன் கொண்ட எதிர்கால சூழலை விளக்கும் கருத்தாகம்” என்கிறது டெக்கோமீடியா; http://www.techopedia.com/definition/28247/internet-of-things-iot.
இந்த விளக்கங்களில் உள்ள தொழில்நுட்ப விவரிப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இவை எல்லாம் சுட்டிக்காட்டும் பொதுவான அம்சம் பொருட்களும் சாதனங்களும் இணையத்தில் இணைக்கப்பட்டிருப்பதும் இப்படி இணைக்கப்படும் பொருட்கள் தங்களை அடையாளம் காட்டி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடியதாக இருப்பதும் தான். லேப்டாப்களும், ஸ்மார்ட்போன்களும் மட்டும் இணைய இணைப்பு பெற்றிருக்கும் நிலை மாறி உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் இணையத்துடன் இணைக்கும் சாத்தியமும், இந்த பொருட்களுக்கு டேக் அல்லது சென்சார்கள் மூலம் அடையாளம் கொடுத்து அவை பரஸ்பரம் பேசிக்கொள்ளும் ஆற்றல் உருவாவதும் தான் இதன் அடிப்படை அம்சம். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பொருளையும் இணையத்தில் இணைத்துவிடலாம் என்பது தான். அதாவது இணையவசதி கொண்டதாக ஆக்கிவிடலாம். இப்படி அடிபம்பு முதல் மின்விளக்கு வரை, பிரிட்ஜ் முதல் டிவி வரை எல்லாவற்றையும் இணையத்தில் இணைக்கலாம். அப்போது எல்லாமே வலைப்பின்னலுக்குள் வந்து உலகமே ஒரு வலைப்பின்னலாக இருக்கும்.
இப்படி இணையத்தில் பொருட்கள் இணைவது வெகு வேகமாக நிகழ்ந்து வருகிறது. தற்போது 12 பில்லியன் சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2020 ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 26 மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர். இப்படி எல்லாம் இணையமயமாகும் தேவை என்ன? இதன் பலன்கள் என்ன? இந்த துறையின் முன்னோடிகள் யார்? அவர்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன? அவை நம் வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும் என்பது போன்றவற்றை தொடர்ந்து பார்க்கலாம்…

0 comments:

Post a Comment