கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படம் டவுன்லோடு. டென்மார்க்கில் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம்.
தற்போதுள்ள இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு திரைப்படம் நமது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.
டென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இண்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இண்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
1GB அளவுள்ள திரைப்படம் ஒன்றை டவுன்லோடு செய்ய 0.2 வினாடிகள் போதும். இதற்கு முன்பு 32 டெராபிட்ஸ் இண்டர்நெட் வேகம்தான் இதுவரை உலகிலேயே அதிக வேகமுள்ள இண்டர்நெட் திறனாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு 43 டெராபிட்ஸ் வேக இண்டர்நெட் சேவை அறிமுகமாகவுள்ளது. இண்டர்நெட் சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகளே இதுபோன்ற அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுக காரணம் என கூறப்படுகிறது.











0 comments:
Post a Comment