கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Streamline Version. 2Gயிலும் வேகமான இண்டர்நெட்டை பெறலாம்

d070cbc86d9051998675e6c74aa397ce
கூகுள் நிறுவனம் தற்போது புதிதாக Streamline Version எனப்படும் புதிய புதிய தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஸ்மார்ட் போன்களில் 3G வசதி இல்லாமலேயே மிகவேகமாக நீங்கள் பிரெளஸ் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு போன்களில் 3G வசதியிருந்தால் மட்டுமே ஒருசில பக்கங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் மொபைல்போனில் 3G வசதியை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் இன்னும் பலர் 2G வசதியையே வைத்துள்ளனர். ஆனால் இவர்களால் வேகமான இண்டர்நெட் வசதியை பெறா முடியவில்லை. கூகுள் இந்த குறையை தற்போது போக்கியுள்ளது.
தனது புதிய Streamline Versionஐ இன்ஸ்டால் செய்தால், 2G இண்டர்நெட் வசதியிலேயே மிகவேகமாக 3G போல இணையத்தில் நாம் நினைத்தவற்றை தேட முடியும். இந்த வசதி ஏற்கனவே பல நாடுகளிலும் இருந்தபோதிலும் இந்தியாவில் தற்போதுதான் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இண்டர்நெட் பிரியர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகேவே கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment