உலகமே ஒரு வலைப்பின்னல்
தேடியந்திரம் என்றதும் கூகிள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கூகிளை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. கூகிளையும் தவிர உள்ள தேடியந்திரங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
இவற்றில் ஷோடன் (Shodan) http://www.shodanhq.com/ ; தேடியந்திரம் முக்கியமானது. ஷோடன் கூகிளுக்கான மாற்று என்றோ ,கூகிளை விட சிறந்த தேடியந்திரம் என்றோ கூற முடியாது. ஷோடன் உண்மையில் வெகுஜனங்களுக்கான தேடியந்திரம் இல்லை. அதில் இணையதளங்களையோ இணைய பக்கங்களையோ தேட முடியாது. எனில் ஷோடன் எதற்காக? ஷோடனில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதங்களை எல்லாம் தேடலாம். அதாவது, வெப்கேம், போக்குவரத்து சிக்னல்கள், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் ,ரவுட்டர்கள் என்று இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தேடலாம். இவ்வளவு ஏன்? மின்நிலையங்கள் போன்றவற்றையும் தேடலாம்- அவை இணைக்கப்பட்டிருந்தால்!.
தேடுவது என்றால், அந்த சாதனங்களில் பின் வாசல் வழி இருக்கிறதா? என அறிந்து அவற்றுக்குள் நுழைவது சாத்தியமா ? என்று அறிவதும் தான். ஆக, ஒரு சாதனம் இணையத்தில் இணைக்கப்பட்டு, அதில் போதுமான பாதுகாப்பு இல்லாம்அல் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இயக்கவும் செய்யலாம்.
இந்த தேடியந்திரம் இரண்டு விஷயங்களை செய்கிறது, இணைய தொடர்பு உள்ள பொருட்களும் சாதனங்களும் உலகில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் அவற்றில் பாதுகாப்பு ஓட்டை இருக்கிறதா ? என்றும் காட்டுகிறது. அதனால் தான் ஷோடனை உலகின் திகிலூட்டும் தேடியந்திரம் என சி.என்.என் அறிமுக கட்டுரை வர்ணிக்கிறது. இணைய உலகின் இருண்ட கூகிள் என்றும் இது வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஷோடனின் நோக்கம் இணைய களவானிகளுக்கு வழிகாட்டுவது அல்ல, இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.
* ஒய்.2.கே -வை நினைவிருக்கிறதா? புத்தாயிரமாவது ஆண்டு பிறக்கும் முன் இணைய உலகமே ஒய்.2.கே பக் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது. பயந்து கொண்டிருந்தது. 1999 ம் ஆண்டு 2000 மாவது ஆண்டுக்கு மாறுவதை 1900 களுக்கு பழக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் அமைப்புகளின் உள் கடிகாரம் புரியாமல் குழம்பி பெரும் பிரச்சனை ஏற்படலாம் என்று எச்சரிக்கையும் அதனால் உண்டான கில் மற்றும் தயார்படுத்தல்களும் நினைவுக்கு வருகிறதா? ஒய்2கே பூதம் புஸ்வானமாகி இருக்கலாம். அல்லது அடக்கப்பட்டிருக்கலாம். இப்போது இந்த கதை எதற்கு என்று நினைக்கலாம். விஷயம் என்ன என்றால் சில மாதங்களுக்கு முன் இணைய உலகை இதோ போல் ஒரு பூதம் பிடித்தாட்டியது. 512 கே என்று சொல்லப்பட்ட அந்த பூதம் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருந்தாலும் என்ன இணைய உலகில் அந்த பூதம் இன்னமும் தூங்கு கொண்டு தான் இருக்கிறது ,எப்போது வேண்டுமானாலும் விழித்துக்கொண்டு தாக்கலாம் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எனவே 512 கே பூத்ததை அறிந்திருப்பது நல்லது.
இணையத்திற்கு என்று ஒரு போக்குவரத்து வரைபடம் இருக்கிறது. ரவுட்டர்களும் , கம்ப்யூட்டர் சாதனங்களும் இணைக்கப்பட்ட பாதைகள் நிரம்பிய வரைபடம் அது. ஒவ்வொரு முறை இணையதில் ஒரு இணைய பக்கத்தை அணுக முற்படும் போது அந்த இணையபக்கத்தில் உள்ள தகவல்கள் இந்த பாதைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டு தான் வந்து சேர்கின்றன. இந்த பாதைகளில் எதை தேர்வு செய்தால் சீக்கிரம் வந்து சேர முடியும் என்ற தேர்வும் நிகழ்கிறது. அதற்கு ஏற்பட ரவுட்டர்களில் திரும்புவது, குறுக்குச்சந்துகளில் பாய்வது போன்ற மாயங்கள் எல்லாம் தானாக நிகழ்கின்றன.
இந்த இணைய போக்குவரத்து நிகழ்வதற்கான பாதைகளும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 512,000 ! அதாவது 512 கே. இணையத்தில் உள்ள ஒவ்வொரு ரவுட்டரும் இந்த பாதைகள் அனைத்தையும் வரைபடமாக தங்கள் நினைவுத்திறனில் சேமித்து வைத்திருக்கின்றன். இந்த வரைபடத்தை பார்த்து தான் சரியான பாதையை ஒவ்வொரு முறையும் தேர்வு செய்கின்றன. இவை எல்லாம் நமக்கு தேவை இல்லாத விஷயம் என நினைக்கலாம். ஆனால், இந்த பாதைகளின் எண்ணிக்கை 512,000 எனும் வரம்பை கொண்டிருக்கின்றன. தேவை எனில் அவற்றை அதிகமாக்க முடியாது. அப்படியே அதிமாக்கினாலும் , பழைய ரவுட்டர்கள் 512 கேவுக்கு மேல் நினைவுத்திறன் இல்லாதவை . போக்குவரத்து அதிகமானால் தினறி மட்டும் அல்ல குழம்பி போகும்.
சில மாதங்களுக்கு முன் இணையத்தில் இப்படி 512 கேவுக்கும் அதிக பாதைகள் உண்டானதால் பல ரவுட்டர்கள் குழம்பி போய் நின்று முக்கிய இணையதளங்கள் தற்காலிகமாக முடங்கின. இந்த பிரச்சனை சரி ஆனாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கின்றன. இணைய போக்குவரத்தில் இணையதளங்களை அடையாளம் காண ஒதுக்கப்படும் ஐபி முகவரி என குறிப்பிடப்படும் இணைய முகவரிகளும் குறிப்பிட்ட வரம்பை கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகமானாலும் இணையவெளியில் பெரும் சிக்கல் தான் என்கின்றனர்.
வெறும் கம்ப்யூட்டர்களும் லாப்டாப்களும் மட்டும் அல்லாமல் இப்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலமும் இணையம் தொடர்பு கொள்ளப்படும் நிலையில் இந்த இரண்டு எண்ணிக்கைகளுமே அதிகரிக்க உள்ளன. ஸ்மார்ட் போன் மட்டுமா, சிப் பொருத்தும் திறன் கொண்ட எண்ணற்ற சாதனங்கள் இணைய நெடுஞ்சாலை பக்கம் வந்து கொண்டிருக்கின்றன.
* கிலவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். தகவல்களை மைய கம்ப்யூட்டரில் சேமிக்காமல், எண்ணற்ற சர்வர்களின் தொகுப்பான மேக பின்னலில் சேர்த்து வைப்பதை தான் கிலவுன் கம்ப்யூட்டிங் என்று புரிந்து கொள்ளலாம். இதே போலவே ஃபாக் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படும் நுட்பம் பற்றி தெரியுமா? வலைப்பின்னல் துறை ஜாம்பவான் சிஸ்கோ உருவாக்கியுள்ள பதம் இது. இன்னமும் வெகுஜன பழக்கத்திற்கு வரவில்லை. ஆனால் விரைவில் வரும்.
கிலவுட் கம்ப்யூட்டிங்கின் நீட்டிப்பு அல்லது அடுத்த கட்டம் என்றும் இதனை சொல்லலாம். மேலும் மேலும் அதிகமான சாதனங்களும் சென்சார்களும் இணையத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் அவற்றில் இருந்து தகவல்கள் சதா சர்வ நேரமும் கிலவுடிற்கு அதாவது வலைப்பின்னலுக்கு அனுப்ப பட்டுக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கண்காணிப்பு காமிராக்களும், வெப்காமிராக்களும் 24 மணி நேரமும் படம் எடுத்து அந்த விவரத்தை வலைப்பின்னலிடம் அளிக்கிறது.
இவை எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை தரம் பிரித்து பகுக்கும் பணி ரவுட்டர்களின் முதுகை ஒடித்து விடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான், எல்லா தகவல்களும் வலைப்பின்னலின் மைய பகுதிக்கு வந்து சேர வேண்டாம் என சிஸ்கோ கருதுகிறது. மாறாக, தகவல்கள் அனுப்படும் முதல் கட்டத்திலேயே ரவுட்டர்களால் அவை தரம் பிரிக்கப்பட்டு வடிக்கப்பட்டு பயனுள்ள தகவல் மற்றும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என சிஸ்கோ சொல்கிறது. இப்படி வலைப்பின்னலின் விளிம்பிலேயே தகவல்கள் வடிகட்டப்படும் ஆற்றல் மற்றும் தேவை தான் ஃபாக் கம்ப்யூட்டங்.
* கூகிள் நிறுவனம் சமீபத்தில் பெளதீக வலை (http://google.github.io/physical-web/ ) திட்டத்தை அறிவித்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பெளதீக வலை என்பது ஒரு ஓபன் சோர்ஸ் திட்டம் . இதை கூகிள் முன்னெடுக்கிறது . ஆனால் அதற்கு சொந்தமானதல்ல. இந்த பெளதீக வலை மூலம் பஸ் நிலையங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை எல்லாமே அவற்றுக்கான தனி இணைய முகவரியை கொண்டிருக்கும். இந்த இடங்கள் அருகே செல்லும் போது அவற்றுக்கு என தனியே எந்த ஒரு செயலியும் ( ஆப்) இல்லாமலே அவற்றில் இருந்தே தகவல்களை பெறலாம். இப்படி இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் பொருட்களுன் தொடர்பு கொள்வதை சிக்கல் இல்லாத அனுபவமாக்க ஒரு பொதுவான அமைபை உண்டாக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
* இணையம் தற்கொலைகளுக்கு அடிகோலியிருக்கிறது . ஆனால் கொலைகளுக்கு நேரடியாக காரணமாக இருந்ததில்லை. இந்த நிலை மாறப்போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் இணைய கொலை இந்த ஆண்டு நிகழலாம் என்று யூரோபோல் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிகரிக்கும் சைபர் குற்றங்களின் விளைவாக இணையம் மூலம் தாக்காளர்கள் உடல்ரீதியான தாக்குதலை நிகழ்த்து உயிரையும் பறிக்கலாம் என இந்த அறிக்கை திகிலூட்டுகிறது. இதுவரை பாஸ்வேர்டு திருட்டு, அடையாள திருட்டு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் சைபர் குற்றவாளிகள் உயிர் பறிக்கும் தாக்குதலை நிகழ்த்தலாம் எனும் அபாயம் மிரள வைக்கலாம். ஆனால் பேஸ்மேக்கர் போன்ற சாதனங்களும் உடல் இயக்கத்தை கண்காணிக்கும் சென்சார்களும் இணையம் மூலம் கட்டுப்படுத்ததப்படும் போது அவை தாக்காளர்கள் கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது தான்.
இந்த இணைய, தொழில்நுட்ப செய்திகள் சொல்வது என்ன? இணையத்தில் காத்திருக்கும் அபாயங்களும், ஆபத்துகளும் அல்ல. அவை பின்விளைவு அல்லது பக்கவிளைவு. அவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு தேவை. தற்காப்பு தேவை. ஆனால் முக்கியமான விஷயம் என்ன என்றால் இணையத்தில் இணைக்கப்படும் சாதனங்களும் பொருட்களும் அதிகமாகி வருவதும், இவை வருங்காலத்தில் மேலும் சகஜமாகி நமது வாழ்க்கை அனுபவத்தையே மாற்ற இருப்பது தான். இணையத்தில் இணைக்கப்படும் இந்த பொருட்கள் – அவை சென்சாராக இருக்கலாம், பிட்னஸ் டிராக்கராக இருக்கலாம், பாதுகாப்பு கருவியாக இருக்கலாம், காட்டில் உலாவும் அரிய ரக மானை கண்காணிக்கும் ரேடியோ அலை டேகாக இருக்கலாம், காற்றில் மாசு உண்டாவதை அளக்கும் சென்சாராக இருக்கலாம் – பொருட்களின் இணையம் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. அதாவது இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ். (‘Internet of Things’ ) . இண்டெர்நெட் ஆப் திங்கிசிற்கு சரியான தமிழ் பதம் காண்பது கொஞ்சம் சிக்கலானது தான். அதே போலவே இந்த பத்திற்கான தெளிவான வரையறையும் கொஞ்சம் சிக்கலானது தான்.
இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தற்போதுள்ள இணைய உள்கட்டமைப்பில், தனியாக அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்களின் பிணைக்கப்பட்ட வலைப்பினல்” என்று விக்கிபீடியா விளக்கம் சொல்கிறது.; http://en.wikipedia.org/wiki/Internet_of_Things ” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது பொருட்கள், விலங்குகள் அல்லது மனிதர்கள் தனியே அடையாளம் காணக்கூடிய டேக் கொண்டு இருப்பதும் , மனிதர்கள் அல்லது கம்ப்யூட்டர்கள் உதவி இல்லாமல் ,தகவல்களை மைய வலைப்பின்னலுக்கு அனுப்பி வைக்க கூடிய சூழல் என்று வாட் ஈஸ் ( http://whatis.techtarget.com/definition/Internet-of-Things) இணையதளம் விளக்கம் சொல்கிறது.
’” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தினசரி பெளதீக சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டு தங்களை அடையாளம் காட்டும் திறன் கொண்ட எதிர்கால சூழலை விளக்கும் கருத்தாகம்” என்கிறது டெக்கோமீடியா; http://www.techopedia.com/definition/28247/internet-of-things-iot.
இந்த விளக்கங்களில் உள்ள தொழில்நுட்ப விவரிப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இவை எல்லாம் சுட்டிக்காட்டும் பொதுவான அம்சம் பொருட்களும் சாதனங்களும் இணையத்தில் இணைக்கப்பட்டிருப்பதும் இப்படி இணைக்கப்படும் பொருட்கள் தங்களை அடையாளம் காட்டி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடியதாக இருப்பதும் தான். லேப்டாப்களும், ஸ்மார்ட்போன்களும் மட்டும் இணைய இணைப்பு பெற்றிருக்கும் நிலை மாறி உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் இணையத்துடன் இணைக்கும் சாத்தியமும், இந்த பொருட்களுக்கு டேக் அல்லது சென்சார்கள் மூலம் அடையாளம் கொடுத்து அவை பரஸ்பரம் பேசிக்கொள்ளும் ஆற்றல் உருவாவதும் தான் இதன் அடிப்படை அம்சம். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பொருளையும் இணையத்தில் இணைத்துவிடலாம் என்பது தான். அதாவது இணையவசதி கொண்டதாக ஆக்கிவிடலாம். இப்படி அடிபம்பு முதல் மின்விளக்கு வரை, பிரிட்ஜ் முதல் டிவி வரை எல்லாவற்றையும் இணையத்தில் இணைக்கலாம். அப்போது எல்லாமே வலைப்பின்னலுக்குள் வந்து உலகமே ஒரு வலைப்பின்னலாக இருக்கும்.
இந்த விளக்கங்களில் உள்ள தொழில்நுட்ப விவரிப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இவை எல்லாம் சுட்டிக்காட்டும் பொதுவான அம்சம் பொருட்களும் சாதனங்களும் இணையத்தில் இணைக்கப்பட்டிருப்பதும் இப்படி இணைக்கப்படும் பொருட்கள் தங்களை அடையாளம் காட்டி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடியதாக இருப்பதும் தான். லேப்டாப்களும், ஸ்மார்ட்போன்களும் மட்டும் இணைய இணைப்பு பெற்றிருக்கும் நிலை மாறி உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் இணையத்துடன் இணைக்கும் சாத்தியமும், இந்த பொருட்களுக்கு டேக் அல்லது சென்சார்கள் மூலம் அடையாளம் கொடுத்து அவை பரஸ்பரம் பேசிக்கொள்ளும் ஆற்றல் உருவாவதும் தான் இதன் அடிப்படை அம்சம். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பொருளையும் இணையத்தில் இணைத்துவிடலாம் என்பது தான். அதாவது இணையவசதி கொண்டதாக ஆக்கிவிடலாம். இப்படி அடிபம்பு முதல் மின்விளக்கு வரை, பிரிட்ஜ் முதல் டிவி வரை எல்லாவற்றையும் இணையத்தில் இணைக்கலாம். அப்போது எல்லாமே வலைப்பின்னலுக்குள் வந்து உலகமே ஒரு வலைப்பின்னலாக இருக்கும்.
இப்படி இணையத்தில் பொருட்கள் இணைவது வெகு வேகமாக நிகழ்ந்து வருகிறது. தற்போது 12 பில்லியன் சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2020 ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 26 மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர். இப்படி எல்லாம் இணையமயமாகும் தேவை என்ன? இதன் பலன்கள் என்ன? இந்த துறையின் முன்னோடிகள் யார்? அவர்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன? அவை நம் வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும் என்பது போன்றவற்றை தொடர்ந்து பார்க்கலாம்…











0 comments:
Post a Comment