இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 18.5 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 18.5 கிலோகிராம் தங்கம் இந்திய மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் திருவாரூர் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
திருவாரூர் வேதாரண்யம் திருத்துறை வீதியில் காரொன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் இந்திய பிரஜைகள் என்பதுடன் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











0 comments:
Post a Comment