2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு

2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான பரிசுத் தொகை தொடர்பான விபரங்களை சர்வசேத கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த உலகக் கிண்ண போட்டியை விட மொத்த பரிசு தொகையின் மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை கடந்த கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
பரிசுத் தொகை விபரம் :-
கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 3.975 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
எந்த போட்டியிலும் தோற்காது கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 600,000 அமெரிக்க டொலர்கள்
காலிறுதியில் தோல்விறும் 4 அணிகளுக்கும் தலா 300,000 அமெரிக்க டொலர்கள
ஒவ்வொரு குழு நிலைப் போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 45,000 அமெரிக்க டொலர்கள்.
முதல் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா 35,000 அமெரிக்க டொலர்கள்

0 comments:

Post a Comment