ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நிறைவு விழா.

ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 25–வது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

கடந்த 1961–ம் ஆண்டு ஜெர்மனி நாடு 2 ஆக பிரிந்தது. கம்யூனிஸ்டு ஆதிக்கத்தின் கீழ் கிழக்கு ஜெர்மனி என்றும் மற்றும் மேற்கு ஜெர்மனி என்றும் ஆனது. 

அப்போது கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு ஏராளமான மக்கள் புலம் பெயர்ந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த பெர்லின் நகரின் குறுக்கே 155 கி.மீட்டர் (96 மைல்) தூரத்துக்கு கிழக்கு ஜெர்மனி அரசு சுவர் கட்டியது. 

அதனால் இருநாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் உறவுகளையும், சொந்தங்களையும் இழந்து தவித்தனர். ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் இருந்தனர். இந்த பெர்லின் சுவர் இருநாடுகளின் இடையேயான பகையை பறைசாற்றும் சின்னமாக திகழ்ந்து வந்தது. 

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் விலகியது. அதைத் தொடர்ந்து 2 ஜெர்மனியும் ஒருங்கிணைந்தது. கடந்த 1989–ம் ஆண்டில் மீண்டும் ஒருங்கினைந்த ஜெர்மனி ஆனது. அதைத் தொடர்ந்து பெர்லின் சுவர் இடித்து வீழ்த்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியின்போது தற்போதைய ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போலந்து முன்னாள் வர்த்தக யூனியன் தலைவர் லேக் வலேசா, சோவியத் ரஷியாவின் கடைசி தலைவரான கோர்ப்பசேவ் ஆகியோர் இருந்தனர். 155 கி.மீட்டர் நீளம் இருந்த அந்த சுவர் தற்போது 3 கி.மீட்டர் மட்டுமே இடிக்கப்படாமல் அப்படியே நினைவு சின்னமாக திகழ்கிறது. 

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 25–வது ஆண்டு நிறைவு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது சுவர் இடிந்து மறைந்ததன் அடையாளமாக அங்கு 15 கி.மீட்டர் தூரத்துக்கு 7 ஆயிரம் வெள்ளை பலூன்கள் நடப்பட்டு இருந்தன. 

பெர்லின் சுவர் இருந்த பிரான்டன் பெர்க் கேட் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பங்கேற்றார்.

0 comments:

Post a Comment