பூமியை 40,000 கிலோ மீற்றர் தொலைவில் கடந்து சென்ற விண்கல்.

ஒரு வீடு அளவான சிறிய விண்கல்லொன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நேரடிப்படி மாலை 6.18 மணிக்கு பூமியை கடந்து சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது. 

60 அடி அகலமான 2014 ஆர் சி என்ற இந்த விண்கல் நியுஸிலாந்துக்கு மேலாக சுமார் 40,000 கிலோ மீற்றர் தொலைவில் கடந்து சென்றுள்ளது. 

அளவிற் சிறிய இந்த விண்கல் தொலை நோக்கி மூலமே அவதானிக்க முடிந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் எதிர்காலத்திலும் பூமிக்கு அருகில் கடந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment