600 மில்லியனை தாண்டியது வாட்ஸ் அப் பயனாளிகளின் எண்ணிக்கை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் மூன்று கோடியாக இருந்த வாட்ஸ் அப் பயனாளிகள் தற்போது 600 மில்லியனுக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத்தலைவர் நீரஜ் அரோரா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் மட்டும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டிவிட்டதாக அவர் தெரிவித்தூள்ளார்.
வாட்ஸ் அப் அளவுக்கு மிக வேகமாக பரவிய சமூக வலைத்தளம் ஒன்று இல்லை என்ற அளவுக்கு இளைஞர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது வாட்ஸ் அப் கலாச்சாரம்.
கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Jan Koum என்பவர் தனது நண்பர் Brian Acton என்பவருடன் சேர்ந்து எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ் அப் இன்று உலக அளவில் பிரபலம் ஆகியுள்ளது.
மிகக்குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஃபேஸ்புக் $19 பில்லியன் கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது











0 comments:
Post a Comment