வெளிவருகிறது சச்சினின் சுயசரிதை.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை குவித்த பிறகு கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சச்சின் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் திகதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சச்சின் 1996– 2000ம் ஆண்டு வரை 25 டெஸ்டுக்கு அணித்தலைவராக பணியாற்றினார். இதில் 4 டெஸ்டில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 9 டெஸ்டில் தோற்றது. 12 போட்டி ‘டிரா’ ஆனது. இந்நிலையில் இந்த சுயசரிதையில் தனக்கு கிடைத்த அணித்தலைவர் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன் என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சுயசரிதையில், அணித்தலைவர் பதவியில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதனால் இந்த விளையாட்டில் இருந்தே விலகிவிடலாம் என்று விரும்பினேன். அணி தோல்வி அடையும் போது அணித்தலைவர் பதவியை நான் வெறுத்தேன். இதற்கு நானே தான் பொறுப்பு என்று உணர்ந்தேன். மிகவும் நெருக்கமாக வந்து தோற்றதால் கடும் வேதனை அடைந்து எனது மனைவிடம் இதை தெரிவித்தேன். அணித்தலைவர் பதவியால் ஏற்பட்ட விரக்தியால் விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தேன். 1997ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பார்படாஸ் டெஸ்டில் 120 ஓட்டங்கள் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றோம். அன்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு தினமாகும். இந்த தோல்வி எனது அணித்தலைவர் பதவியில் நடந்த மிகவும் மோசமான நிகழ்வாகும். வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். 81 ஓட்டங்களில் சுருண்டு பரிதாபம் அடைந்தோம். இதனால் 38 ஓட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது. இந்த தோல்வி என்னை கடுமையாக பாதித்தது. எனது அறையை மூடிவிட்டு 2 நாட்களாக உள்ளே இருந்தேன். அந்த தொடர் முழுவதும் அந்த தோல்வியின் வேதனையை உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment