கையடக்கத்தொலைபேசி மூலம் புற்று நோயை கண்டறியும் வசதி - இரு வருடங்களில் அறிமுகமாகிறது
ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை கையடக்கத் தொலைபேசி மூலம் பரிசோதிக்கும் வசதி இன்னும் இரு வருடங்களில் பாவனையாளர்களுக்கு சாத்தியமாகும் என பிரித்தானிய கண்டு பிடிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அவுல்ஸ்டோன் நிறுவனத்தைச் சேர்ந்த மேற்படி கண்டுபிடிப்பாளர்கள் ஏற்கனவே சுவாசத்தை பகுப்பாய்வு செய்யும் நோய் கண்டுபிடிக்கும் மேசை மேல் வைத்துப்பயன்படுத்தக் கூடிய உபகரணத்தை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை கையடக்கத் தொலைபேசியில் பொருத்தக்கூடிய நுண் உபகரணமாக மாற்றும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.











0 comments:
Post a Comment