இறுதிப் போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை..?
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில், இந்தியா 4-0 என வெற்றி பெற்றுள்ளது. இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை முழுமையாக வென்ற பெருமையைப் பெறும்.
இதுவரையிலும் இலங்கை அணி எந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு சவால் அளிக்கவில்லை. அதிலும், கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் ரோஹித் சர்மா 264 ஓட்டங்களை அடித்து உலக சாதனை படைக்க, இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 100 பந்துகளில் சதம் அடித்த ரோஹித், அடுத்த 73 பந்துகளில் 164
ஒட்டங்களை குவித்தார்.
ஒட்டங்களை குவித்தார்.
இதில் இருந்தே இலங்கையின் பந்து வீச்சும், களத்தடுப்பும் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை அறியலாம். மலிங்க, ஹேரத் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தங்கள் அணி பந்து வீச்சில் தடுமாறுவதை, இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் ஒப்புக் கொண்டார். ரோஹித் மட்டுமல்ல தொடக்க வீரர் ரஹானே, விராட் கோலி, அம்பாதி ராயுடுவும் சிறப்பாகவே செயல்படுகின்றனர். இந்த ஆட்டத்திலும் இது தொடரும் என நம்பலாம். இந்திய அணிக்கு பந்து வீச்சில் உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். வழக்கம் போல விராட் கோலி, கடைசி ஆட்டத்தில் சில பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடலாம்.
இந்தியா ஏற்கெனவே தொடரை வென்று விட்டதால், கடைசி ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். ரெய்னாவுக்குப் பதிலாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கேதார் ஜாதவ் முதல் முறையாக இந்திய அணியில் ஆடும் வாய்ப்பைப் பெறலாம்.
இப்போட்டி நடைபெறவுள்ள ரஞ்சி, டோனியின் சொந்த ஊர். ஆனால், முதல் முறையாக அவர் இல்லாமல் ரஞ்சியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. டோனி இல்லாததால் ஐந்தாவது ஆட்டத்தைக் காண ரசிகர்களின் வருகையும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் மனோஜ் குமார் கூறுகையில், "இதுவரையிலும் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. சலுகை டிக்கெட்டுகளையும் கணக்கில் கொண்டால் மட்டுமே, 20 ஆயிரம் பேர் வரை மைதானத்துக்கு வர வாய்ப்புள்ளது' என்றார்.
முதல் 4 ஆட்டங்களில் முறையே 169 ஓட்டங்கள்;, 6 விக்கெட், 6 விக்கெட், 153 ஓட்டங்கள்; வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றிகளை பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தொடரை முழுமையாக (5-0) வென்று இலங்கையை ‘வயிட்வாஷ்’ செய்ய வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இந்திய அணி முதல் முறையாக (1982-ம் ஆண்டு) இலங்கையுடன் மோதிய நேரடி ஒரு நாள் தொடரில் (3-0) அந்த அணியை ‘வயிட் வாஷ்’ ஆக்கியிருந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை அணியை ‘வயிட் வாஷ்’ செய்ய உறுதி பூண்டுள்ளது.











0 comments:
Post a Comment