விஷாலைபாராட்டியவிஜய்
சமீபகாலமாக திருட்டி விசிடிகளுக்கு எதிராக நடிகர் விஷால் போராடி வருவது தெரிந்த விடயம், விஷால் காரைக்குடியில் புதுப்படங்களை ஒளிபரப்பும் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனர் ஒருவரை பிடித்தார்.
அதேபோல் சமீபத்தில் கூட திருப்பூரில் புதுப்படங்கள் விற்கும் திருட்டு விசிடி கும்பலை அவரே நேராக சென்று பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து திருட்டி விசிடிக்கு எதிராக போராடி வரும் விஷாலை இளைய தளபதி விஜயை பாராட்டியுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், விஷால் உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. திருட்டு விசிடியை ஒழிக்க சொல்வதை விட செயலில் இறங்கியது நல்லது. திருட்டு விசிடியை நிறுத்துவோம் என்று விஜய் டிவிட் செய்துள்ளார்.
Proud of you @VffVishal. You have proved that actions speak more louder than words. Let’s stop video piracy
இதற்கு விஷாலும், மிக்க நன்றி விஜய் சார், உங்களின் இந்த பாராட்டு எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது என்று டிவிட் செய்துள்ளார்.
Dear vijay.. Thank you so much for your support .. It will make a huge difference. Let’s stop piracy.. @Vijay_cjv











0 comments:
Post a Comment