கிரிக்கெட்: இந்தியா - மே.தீவுகள் தொடர் பாதியில் நிறுத்தம்

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர், இந்தியாவில் விளையாடிவரும் கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திக்கொண்டு நாடு திரும்புவார்கள் என மேற்கிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சின்னம்
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சின்னம்
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாக வாரியத்துக்கும் இடையில் இருந்துவருகின்ற ஊதியப் பிரச்சினை காரணமாக வீரர்கள் திரும்ப அழைத்துகொள்ளப்படுகிறார்கள்.
நடந்துவருகின்ற தொடர் ஒருதலைப்ப்டசமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியா இலங்கை அணிகள் விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றுக்கு அவசரமாக ஏற்பாடு செய்துள்ளது.

பிசிசிஐ 'அதிர்ச்சி'

இந்தியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் வரும் 20ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கவிருந்த ஒருநாள் பந்தயமும், 22ஆம் தேதி கட்டாக்கில் நடக்கவிருந்த 20 ஓவர் போட்டியும், அதன் பின்னர் நடக்கவிருந்த 3 டெஸ்ட் ஆட்டங்களும் தற்போது ரத்தாகியுள்ளன.
இது சம்பந்தமாக பிசிசிஐ செயலாளர் சஞ்ஜய் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் முடிவு தங்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது விளையாட்டு வீரர்களுடன் தமக்கு இருக்கின்ற உள்மட்டப் பிரச்சினைகளை உள்ளுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் இரண்டு நாடுகள் பங்கேற்கின்ற போட்டித் தொடரை பாதிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது தொடர்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கின்ற உரிமைகளைப் பெறுவது தொடர்பில் அனைத்து வழிமுறைகளும் பரிசீலிக்கப்படும்டும் என்றும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தாம் நடவடிக்கை கோரப்போவதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் ஒருநாள் போட்டித் தொடர்

திடீரென்று நடந்த மாற்றங்களை அடுத்து பிபிசிஐ அவசர அவசரமாக செயல்பட்டு இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரொன்றை விளையாட ஏற்பாடு செய்துள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி இத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment