திரைப்படமாகவுள்ள 'டெம்பள் ரன்
அண்ட்ரோய்ட் சாதனங்கள் மற்றும் அப்பிளின் ஐபோன், ஐபேட் பாவனையாளர்களுக்கு நன்கு பரீட்சயமான விளையாட்டுக்களில் (Game) ஒன்றே 'டெம்பள் ரன்'.
இமான்ஜி ஸ்டூடியோஸினால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மேற்படி விளையாட்டானது பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் இதன் தொடர்ச்சியாக அடுத்த வெளியீடு இவ்வருடத்தில் வெளியாகியது. இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'டெம்பள் ரன்' ஐ அடிப்படையாக வைத்து திரைப்படமொன்றை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் புகழ் 'பெற்ற ஹெரி பொட்டர்' தொடர் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டேவிட் ஹேமென் மற்றும் வோனர் புரஸ் நிறுவனமும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் இதற்கான கதையை எழுதுவதற்கு எழுத்தாளர் ஒருவரையும் வோனர் புரஸ் நிறுவனம் தேடி வருவதாக தெரியவருகின்றது.
மற்றுமொரு பிரபல விளையாட்டான ' எங்ரி பேர்ட்' ஏற்கனவே எனிமேட்டட் படமாக தயாரிக்கப்பட்டு வருவதுடன் அது எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment