சூர்யாவின் மாஸ் படத்தில் ராணா, பிரபாஸ்?
சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்' திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராணா மற்றும் பிரபாஸ் ஆகிய இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று பிரேம்ஜி அமரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராணா மற்றும் பிரபாஸுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு மாஸுடன் இணையும் பிரபலங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராணாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யா, பிரபாஸ், வெங்கட்பிரபுவுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது மாஸ் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் நடைபெற்று வருவதாலும், ராணா மற்றூம் பிரேம்ஜியின் செல்பி புகைப்படங்களாலும் ராணா, பிரபாஸ் இருவரும் மாஸ் படத்தில் கெஸ்ட்ரோலில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வெங்கட்பிரபு உறுதியான அறிவிப்பு வரை காத்திருப்போம்.

0 comments:
Post a Comment