முரளிதரன் சுழலில் சங்கக்காரா அரங்கேற்றிய வியக்க வைத்த ஸ்டம்பிங்! (வீடியோ இணைப்பு)
கடந்த 2003ம் ஆண்டு விபி தொடரில் இலங்கை- அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் 9வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திக்கித்திணறி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்தது. இதில் அத்தப்பத்து (70), ஜெயவர்த்தனே (56), சங்கக்காரா (42) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி 212 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது.
ஜிம்மி மகிர், ஹேடன் இலங்கையின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர். இந்நிலையில், 14வது ஓவரின் 3வது பந்தை முரளிதரன் வீசினார். இதை மகிர் நேராக விளாச முயற்சித்தார். ஆனால் அந்த பந்து ஆஃப் திசையில் ஸ்பின் ஆகி எகிறவே மகிர் அதை தவறவிட்டார்.
ஆனால் எகிறிய அந்த பந்தை சங்கக்காரா, தாவி பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இது அரங்கத்தில் இருந்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் மகிர் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கீப்பராக அசத்திய சங்கக்காரா, 99 ஸ்டம்பிங், 383 பிடியெடுப்பு, 482 ஆட்டமிழப்புகளை நிகழ்த்தி 3வது இடத்தில் இருக்கிறார்.
இருப்பினும் பின்னர் வந்த ஹேடன் (42), லெக்மென் (38), பெவன் (45) ஆகியோரின் அதிரடியால் அவுஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 214 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.











0 comments:
Post a Comment