கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.
டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.
இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்துவிடலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நமது கண் இமை ஒருமுறை இமைக்க 300 மில்லி செகண்டுகள் நேரம் ஆகும். அதன்படி பார்த்தால் ஒருமுறை இமை கண்மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றால் இதன் வேகத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
டச்சு நாட்டை சேர்ந்த Eindhoven என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு இந்த புதிய வகை இண்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.











0 comments:
Post a Comment