லண்டன் பாலத்தில் 140 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை

உலகின் மிக பிரபலமான லண்டன் டவர் பாலத்தில் தேம்ஸ் நதிமட்டத்திலிருந்து 140 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த கண்ணாடி நடைபாதைக்காக 10  இலட்சம் ஸ்ரேலிங் பவுண் செலவிடப்பட்டுள்ளன.

1982 ஆம் ஆண்டின் பின்னர் இப்பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.

எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி இந்த நடைபாதை நிர்மாணிக்கப்படும். இதில் ஒரு தடவை நடந்து செல்வதற்கு 9 ஸ்ரேலிங் பவுண்கள் கட்டணமாக அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment