முதலாவது அப்பிள் கணனி 5 கோடி ரூபாவிற்கு விற்பனையாகிறது
1976ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியாக் ஆகியோரினால் இக்கணினி தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்பிள் 1 என பெயரிடப்பட்ட இக்கணினி, முதன் முதலில் சந்தைக்கு வந்த பேர்சனல் கணனியாகும்.
அக்காலத்தில் அப்பிள் 1 கணனி தலா 666.66 டொலர் விலைக்கு விற்கப்பட்டது. அப்பிள் 1 ரக கணனிகள் ஸ்டீவ் ஜொப்ஸின் பெற்றோரின் வாகனத் தரிப்பிட அறையில் வைத்து விற்பனை செய்தனர். சுமார் 200 அப்பிள் 1 ரக கணனிகளை உருவாக்கியுள்ளனர்.
இவற்றில் தற்போது 6 கணனிகள் மாத்திரமே இயங்கும் நிலையில் உள்ளன. அவற்றில் ஒரு கணனி அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஏன் 666.66 டொலர் விலை?
அப்பளி; 1 கணனிகளுக்கு 666.66 டொலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டபோது அதற்கான காரணம் என்ன என பலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அந்த இலக்கம் பார்வைக்கு அழகாக இருக்கிறது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என ஸ்டீவ் வொஸ்னியாக் ஒரு தடவை தெரிவித்தார்.
அக்கணனிகளை உருவாக்குவதற்கு சுமார் 540 டொலர் செலவரியதாகவும் அவர் தெரிவித்தார்.











0 comments:
Post a Comment