தொலைபேசி, மின்னஞ்சல்களை இரகசியமாக கண்காணிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கை அம்பலமானதால் சர்ச்சை

அமெ­ரிக்­கர்­களின் தொலை­பேசி மற்றும் மின்­னஞ்சல் மூல­மான தொடர்­பா­டல்கள் அந்­நாட்டு தேசிய பாது­காப்பு முக­வ­ர­கத்­தினால் இர­க­சி­ய­மாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த விடயம் அம்­ப­ல­மா­கி­யமை பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.

கூகுள், பேஸ்புக், அப்பிள், மைக்­ரோசெப்ட், பல்டோக், யூரியூப், ஸ்கைப் ஏ.ஓ.எல். நிறு­வ­னங்­களின் தொடர்­பாடல் பொறி­மு­றை­க­ளி­லி­ருந்து அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு முக­வர கம் நேரடி­யாக தக­வல்­களை பெற்­றுக்­கொண்­ட­தாக கடந்த வாரம் செய்­திகள் வெளி­யா­கின.

இது மக்­களின் அந்­த­ரங்­கத்தை மீறும் நட­வ­டிக்கை என பலர் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர். இத்­திட்­டத்­திற்கு PRISM project பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால், அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும் அவரின் பாது­காப்பு அதி­கா­ரி­களும் இந் ­ந­ட­வ டிக்­கையை ஆத­ரித்­துள்­ளனர்.

இத்­திட்டம் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என அமெ­ரிக்க புல­னாய்வு பணிப்­பாளர் ஜேமஸ் கிளப்பர் கூறி­யுள்ளார். இத்­திட்­ட­மா­னது அமெ­ரிக்கப் பிர­ஜை­களை இலக்கு வைத்து அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் நாட்­டுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே இதை அமுல்­ப­டுத்­து­வ­தா­கவும் அவர் கூறினார். ஊட­கங்கள் இத்­திட்­டத்தின் தன்­மையை திரி­பு­ப­டுத்தி காட்­டு­கின்­றன என அவர் தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இது தொடர்­பாக கூறு­கையில், இக்­கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கைள் யாவும் அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் கடும் மேற்­பார்­வைக்­குள்­ளாக்­கப்­பட்டே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றன எனவும் அமெ­ரிக்­கர்­களின் தொலை­பேசி  உரை­யா­டல்­களை ஒட்­டுக்­கேட்­பது, மின்­னஞ்­சல்­களை வாசிப்­பது போன்ற செயற்­பா­டுகள் இதில் இடம்­பெ­ற­வில்லை எனவும் அவர் கூறினார்.

அதே­வேளை, யாஹு, கூகுள், பேஸ்புக், அப்பிள் ஆகிய நிறு­வ­னங்கள் இத்­திட்­டத்தில் தான் சம்­பந்­தப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளன. கடந்த வியா­ழக்­கி­ழ­மைக்கு முன்னர் PRISM  என்ற வார்த்­தை­யையே தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என பேஸ்புக் நிறு­வன ஸ்தாபகர் மார்க் ஸுகர்பேர்க் தெரி­வித்தார். எனினும் மேற்­படி நிறு­வ­னங்­களில் பல இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன என சில செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை, அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் இக்­கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கை அதன் நேச­நா­டு­க­ளிலும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது. 

பிரிட்டன், கனடா, அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடுகள் அமெ­ரிக்­கா­வுடன் உளவுத் தக­வல்­களை பரி­மாறிக் கொள்­கின்­றன. ஆனால் அமெ­ரிக்­காவின் PRISM திட்டத்திற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு அந்நாடுகள்  திணறுகின்றன. 

இந்நிலையில் மேற்படி இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை அம்பலமாகியமை தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment