மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேரும் இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் 8 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையிலேயே விடுதலையான 5 இந்திய மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











0 comments:
Post a Comment