சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம்
இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கலாக 339 ஓட்டங்களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான நிரல்படுத்தலில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நிரல்படுத்தலுக்கான 420 படிநிலை புள்ளிகளை மெத்யூஸ் பெற்றுள்ளதுடன் பாகிஸ்தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படிநிலை புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தி லும் பங்களாதேஷின் ஷக்கில் அல் ஹசன் 361 படிநிலை புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை சகல துறை வீரர்களுக்கான நிரல்படுத்தலில் முதல் ஐந்து இடங்களிலும் ஆசிய நாட்டவர்கள் இருக்கின்றமை சிறப்பம்சமாகும். நான்காம் இடத்தில் ரவீந்த்ர ஜடேஜாவும் ஐந்தாம் இடத்தில் திலகரட்ண டில்ஷானும் உள்ளனர்











0 comments:
Post a Comment