நரம்­புத்­த­ளர்ச்­சிக்கு மருந்­தாகும் செவ்­வா­ழைப்­பழம்.

பலரும் அரிய அள­வி­லேயே உட்­கொள்ளும் செவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. 


இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்­நோய்­களை குண­மாக்கும். செவ்­வா­ழையில் உயர்­தர பொட்­டா­சியம் உள்­ளது.இது சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­ப­டு­வதை தடுக்­கி­றது. இதில் விட்­டமின் சி அதிகம் உள்­ளது. செவ்­வா­ழையில் ஆண்டி ஆக்­ஸிடென்ட் காணப்­ப­டு­கி­றது. 

இதில் 50 சத­வீதம் நார்ச்­சத்து காணப்­ப­டு­கி­றது. மாலைக்கண் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இரவு ஆகா­ரத்­துக்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்­வாழை சாப்­பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குண­மாகும். 

பல்­வலி, பல்­ல­சைவு போன்ற பல­வ­கை­யான பல்­வி­யா­தி­க­ளையும் செவ்­வா­ழைப்­பழம் குண­மாக்கும். பல் தொடர்­பு­டைய நோய்கள் ஏற்­பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்­வாழை சாப்­பிட்டு வர ஆடிய பல் கூட கெட்­டிப்­படும். 

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியா­தி­க­ளுக்கு செவ்­வாழை சிறந்த நிவா­ரணம் தரும். சிரங்­குக்கு மருந்து போடா­விட்­டாலும் செவ்­வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்­பிட்டு வர சரும நோய் குண­மாகும். 

நரம்­புத்­த­ளர்ச்சி ஏற்­பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறை­பாடு ஏற்­படும். எனவே நரம்பு தளர்ச்­சியால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தின­சரி இரவு செவ்­வா­ழைப்­பழம் சாப்­பி­ட­வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்­வாழை சாப்­பிட்டால் நரம்­புகள் பலம் பெறும். 

தொற்­றுநோய் கிரு­மி­களை கொல்லும் அரிய சக்தி செவ்­வாழை பழத்­திற்கு உண்டு.வாரம் ஒரு­முறை செவ்­வாழை சாப்­பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்­டுப்­படும். தினமும் ஒரு செவ்­வாழை சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு அஜீ­ர­ணக்­கோ­ளாறு ஏற்­ப­டாது. 

மலச்­சிக்கல் இருப்­ப­வர்கள், மூலநோய் குறை­பாடு உள்­ள­வர்கள் தினமும் ஒரு வாழைப்­பழம் சாப்­பிட்டு வந்தால் அந்த குறை­பா­டு­களில் இருந்து விடு­ப­டலாம். 
மேலும் தினமும் இரவு உண­விற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்­பிட்டு வந்தால் நல்ல ஜீர­ண­சக்தி உண்­டாகும். மேலும் செவ்­வாழை பழம் கல்­லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்­டது. எந்த வய­தி­ன­ராக இருந்­தாலும் கண் பார்வை குறைய ஆரம்­பித்­த­வுடன் அவர்­க­ளுக்கு தின­சரி உணவில் செவ்­வா­ழைப்­பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்­க­ளுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்­ச­மாக தெளி­வ­டையும். 

திரு­ம­ண­மான தம்­ப­தி­யினர் குழந்தை பேறுக்­காக மருத்­து­வ­ரையோ, ஜோசி­ய­ரையோ நாடுவர். அவர்­க­ளுக்கு செவ்­வாழை அரு­ம­ருந்­தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment