தூய்மை இந்தியாவில் 'கத்தி' நாயகி

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து பல சினிமா பிரபலங்கள் இந்தியாவை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நாம் பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை தமன்னா மும்பையில் உள்ள ஒரு பகுதியை தூய்மைப்படுத்தினார். இந்நிலையில் இன்று 'கத்தி' நாயகி சமந்தாவும் தூய்மை இந்தியா திட்டத்திற்காக துடைப்பத்தை கையில் எடுத்துள்ளார்.

இன்று காலையில் நடிகை சமந்தா ஐதராபாத் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து அவர் அங்குள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இவருடன் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா கோனா அவர்களும் இணைந்து அந்த பகுதியை சுத்தப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து தெரிவித்த சமந்தா, 'இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணியில் எனது பங்களிப்பும் ஒரு சிறுதுளி இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகவும் இதேபோல் தன்னுடைய ரசிகர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபடவேண்டும் என தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment