கயல் ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன்

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஆர்யா, சூரி, விமல், அஞ்சலி, தம்பி ராமைய்யா, விக்ரம் பிரபு, கயல் படத்தின் நாயகன் சந்திரன், நாயகி ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் 'இந்த படத்தில் நடித்த நாயகன் சந்திரன் அறிமுக நடிகர் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் இவர் தனக்கு ஏற்கனவே நன்றாக அறிமுகமானவர் என்றும், அவருடன் இணைந்து "ஐடெண்டிட்டி" (Identity) என்ற குறும்படத்தில் தான் நடித்திருப்பதாகவும் கூறினார்.

இயக்குனர் பிரபு சாலமன் பெரிய நடிகர்களை நம்பாமல் தன்னுடைய கதையின் மீது அழுத்தமாக நம்பிக்கை வைத்து படமெடுப்பவர் என்றும் அதனால்தான் அவருடைய படம் பெறும் வெற்றி பெறுகிறது என்றும் பாராட்டினார்.

கயல் படத்தில் கடைசி 30 நிமிடங்கள் டயலாக்கே இல்லாமல் வெறும் காட்சி மட்டுமே இருப்பதாக கூறப்படுவதாகவும், இம்மாதிரி தைரியமாக படமெடுக்க பிரபுசாலமன் அவர்களால் மட்டுமே முடியும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.
 
இந்த விழாவில் பேசிய காமெடி நடிகர் சூரி, 'ஷங்கருக்கு அடுத்து காட்சிகளில் பிரமாண்டம் காட்ட பிரபு சாலமன்

0 comments:

Post a Comment