உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத வேண்டும்: பாண்டிங் விருப்பம்.


ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

2015–ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோத வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்த இரு அணிகளும் மோதுவதே சிறந்ததாக இருக்கும். இரு அணிகளிடம் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்ற வேண்டும்.

உலககோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய பவுலர்கள் திணறுவார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கேப்டன் டோனி தனது தொழில் நுட்பத்தை மாற்றிக் கடினமாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.

பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை உலக கோப்பையை (2003, 2007) கைப்பற்றி இருக்கிறது. இதில் 2003–ல் இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment