கழுத்தை நெரிக்கும் காலநிலை.
பூமியும் அதன் தாவரங்களும் ஆள்பவர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டிய
"" தற்காலிக அறங்காவலர்களே அவர்கள். இவ்வாறு கெளதம புத்தரின் சீடரான மஹிந்தரினால் போதிக்கப்பட்ட கெளதம புத்தரின் தத்துவத்திலிருந்தே இலங்கைத் தலைவர்கள் உந்து சக்தியைப் பெற்றிருந்தனர்''
இது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் தொடர்பான உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தெரிவித்த கருத்து.
இத்தகைய ஒரு புத்தரின் அற்புதமான போதனை தங்களுக்கு உந்து கச்தியினால் வழங்கியதாக ஜனாதிபதி கூறுவதற்கு கூறிய ஒரு சில நாள்களுக்கு முன்பு தான் ஐம்பேடின் என்ற இடத்தில் மண்சரிவில் அகப்பட்டு 4 இராணுவத்தினர் உயிரிழந்தனர். இன்னொரு இராணுவ வீரர் படுகாயங்களுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்படியாக அதிக மழைவீழ்ச்சியால் மண் சரிவு ஏற்பட்டு உயிர்கள் பலி கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் போது ஊவா மாகாணத்தில் வறட்சி நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ரூபா2500 வீதம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையாளர் இந்த வறட்சி நிவாரணம் தேர்தல் முறைகேடு என்று சொல்லி அதைத் தடை செய்திருந்தார். இருந்தபோதிலும் அது வறட்சி நிவாரணமாதலால் உடனடியாக வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமன்றி மேலும் 9 மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ""நாங்கள் பூமியையும்,தாவரங்களையும் எதிர்காலச் சந்ததிக்காக பாதுக்காக்கப் படைக்கப்பட்டவர்கள்'' என்பது போன்று பாவனை செய்து உரையாற்ற இங்கு இலங்கை நிலங்களோ தன் தாவரங்களை இழந்து அம்மணமாகிப் போய் அழிவின் விளிம்பில் கிடக்கின்றன.
ஜனாதிபதியின் வார்த்தைகள் அழகும் அர்த்தமும் நிறைந்தவை தான்.ஆனால் அந்த வார்த்தைகளுக்கும் ஜனாதிபதியின் நடைமுறைச் செயற்பாடுகளுக்குமிடையிலான இடைவெளி வெகு அதிகம்.
கடந்த சில வருடங்களாக வருடா வருடம் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும்,பல உயிர்கள் இழக்கப்படுவதும்,சொத்துகள் இழக்கப்படுவதும் மக்கள் அகதிகளாக பொது இடங்களில் தஞ்சம் புகுவதும் இலங்கையில் வழமையான விடயங்களாகி விட்டன. அதே போன்று மண் சரிவுகளால் வீடுகள்,கடைகள் சேதமடைவதும், மக்கள் உயிரிழப்பதும், போக்கு வரத்துக்கள் தடைப்படுவதும் அடிக்கடி ஏற்படுகின்றன.
இன்னொரு புறம் வறட்சியினால் குடிநீர் கூட இன்றி மனிதர் படும் அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்து போகின்றன. குடிநீர் பெளசர்களை வாங்க அரசாங்கம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்த போதும் மக்களுக்கு போதியளவு குடிநீர் வழங்க முடிவதில்லை. விவசாயத்தில் ஏற்படும் அழிவால் மக்கள் கொடிய வறுமையில் தள்ளப்படுகின்றனர். பல விவசாயிகள் தமது வங்கிக் கடன்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் சமச் சீதோஷ்ண நிலை கொண்ட இந்த சின்னஞ் சிறு தீவில் ஏன் இந்த நிலை? இயற்கையன்னை கோபம் கொண்டு விட்டாளா? அல்லது கோபமூட்டப்பட்டு விட்டாளா?
இந்த நிலைமைக்கெல்லாம் மனிதர்களே காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இயற்கையை மனிதன் அழிக்கும் போது இயற்கை மனிதனை அழிக்கிறது என்கிறார்கள்.
யார் இந்த மனிதர்கள்?
வறட்சியினால் நீர் தேடி குடங்களையும், வாளிகளையும் தூக்கிக் கொண்டு அலையும் அப்பாவி ஏழைகளா? விவசாயம் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உழவர்களா? வெள்ளத்தால் உயிரிழக்கும் அப்பாவிகளா?
இல்லை! நிச்சயமாக இல்லை!
அப்படியானால் காரணமானவர்கள் யார்?
யார் இந்தப் பூமியையும்,தாவரங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் பாரம் கொடுக்க வேண்டிய பொறுப்புடைய அறங்காவலர்களோ அவர்களே இன்றைய பேரழிவின் மூல கர்த்தாக்களாக இருந்து வருகின்றனர்.
இயற்கையைப் பாதுகாக்கவே தங்களை அர்ப்பணிப்பதாகக் கூறும் இவர்களே இன்று இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு அபிவிருத்திக்கு முதலிடம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறன்றது. எந்த ஒரு நாட்டுக்கும் இன்றைய நவீன உலகில் அபிவிருத்தி என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகும். அபிவிருத்தியில் அக்கறை செலுத்தத் தவறினால் இலங்கை பல படிகள் உலக அரங்கில் பின் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
ஆனால் அபிவிருத்தி என்பது மக்கள் நலன் சார்ந்ததாக தேசிய நலன்களுக்கு பாதகம் ஏற்படாத வகையிலான இயற்கைச் சமநிலையில் குழப்பம் ஏற்படுத்தாத வகையிலான திட்டங்களாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் அந்நியச் செலாவணி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டவையாகவும், ஏனைய விடயங்கள் கணக்கில் எடுக்கப்படாத வகையிலுமே அமைந்துள்ளன.
கடந்த சில வருடங்களில் உருவாக்கப்பட்ட நீர் மின்நிலையங்கள் காரணமாக பெருமளவு மழைக்காடுகள் அழிக்கப்பட்டன. ஒரு புறம் புதிய நீரேந்தும் பகுதிகள் காரணமாகக் காடுகள் அழிக்கப்பட்டன. மலைப்பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படும் போது நிலக்கீழ் நீரோட்டம் நலிவடையப்போகும் அதே வேளையில், மண் பெருமளவு ஆறுகளில் கலந்து ஆற்றின் ஆழம் குறைவடைவதுடன் முகத்துவாரப் பகுதிகளும் உயர்கின்றன. இன்னொரு புறம் ஏற்கனவே ஆறுகளால் நீர் பாய்ச்சப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்ட நிலங்களும் ஆறுகள் திசை திருப்பபப்படும் போது போதிய நீர் இன்மையால் வறட்சிப் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இவற்றைக் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் ஒரு புறம் வறட்சியும்,மறுபுறம் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகின்றன.
இங்கு மின்சாரம் பெறுவது ஒன்று மட்டுமே நோக்கமாக இருக்கும் போது ஏனைய பிரச்சினைகள் புறம் தள்ளப்படுகின்றன. கொத்மலைத் திட்டத்துக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பிய போதும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்தப்பகுதியில் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு என்பன சாதாரண விடயங்களாகி விட்டன.
சரியான புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதன் காரணமாக வழமையான மழை நீரோட்டம் தடுக்கப்பட்டு வெள்ளப் பெருக்கும், மண்சரிவுகளும் ஏற்படுகின்றன.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட போதிலும் அதை அலட்சியம் செய்து விட்டு மின்நிலையம் இயக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து வெளியேறும் நீரினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன்,காற்றில் கலக்கும் கரித்தூசுகளின் அளவு காற்று மண்டலத்தையே பெருமளவு வெப்பமடைய வைக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த எந்த வித ஏற்பாடுகளும் இல்லை.
இப்படியான அபிவிருத்திகள் மூலம் இலங்கை வெளிநாட்டு நிறுவனங்களின் குப்பைக் கூடையாக மாற்றப்படுகிறது. அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பேரில் சுற்றுச் சுழல் பாதுகாப்பு தொடர்பான அழுத்தங்கள் அந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
இப்படியான நிலையில் பருவம் தப்பிய ஆனால் அளவுக்கு அதிகமான மழை, தொடர்ச்சியான வறட்சி போன்ற விடயங்களால் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையின்மையால் புவி வெப்பமடைதலும் அதிகரிக்கின்றது.
உயர்தரக் கட்டடங்கள், அகன்ற வீதிகள், பெரும் புகை தள்ளும் ஆலைகள் என்பன எமது இயற்கையைச் சம நிலையைப் பாதிக்கும் போது காலநிலை மாற்றம் எமது நாட்டின் கழுத்தை நெரிக்காமல் இருக்குமா?

0 comments:
Post a Comment