லண்டனில் தர்லோச்சன் சிங்கிற்கு சீக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்.
இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பார்க் பிளாசா பகுதியில் நேற்று இரவு நடந்த சீக்கியர்களுக்கான விருதுகள் 2014 விழாவின்போது, இந்திய தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சர்தார் தர்லோச்சன் சிங்கிற்கு சீக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
சீக்கிய மதத்திற்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள் மற்றும் பிற வாழ்வியல் நடைமுறைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், 81 வயது நிறைந்த சிங்கிற்கு விருது வழங்குவது குறித்த வாழ்த்துரையின் முன்பாக சீக்கிய மதம், விளையாட்டு, இந்திய அரசியல் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றை குறித்த வாழும் கலை களஞ்சியம் என அவரை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
அவரை குறித்த வாழ்த்துரையில், அவர் ஒரு சிறந்த பாராளுமன்றவாதி, தேர்ந்த விளையாட்டு வீரர், சிறந்த கட்டுரையாளர், ஒரு வெற்றிகரமான சமூக தொடர்பாளர் மற்றும் ஒரு சிறப்பான நிர்வாகி என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த ஒரே சீக்கியர் சிங் ஆவார்.
இதனை தவிர்த்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மக்கள் தொகை ஆணையம் மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர் பதவி வகித்தவர் என்ற சிறப்புகளையும் கொண்டவர் சிங். விருதை பெற்று கொண்ட பின்னர் பேசிய அவர், இந்த விருதை பெறுவதால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன். சர்வதேச அளவில் சீக்கிய மதம் ஊக்குவிக்கப்படுவதற்கு இது நல்லதொரு நடவடிக்கையாக இருக்கும்.
நான் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எனது சமுதாயத்தில் இருந்து இந்த மரியாதை எனக்கு கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் சீக்கிய ஆய்வு மையம் அல்லது சீக்கிய தகவல் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சீக்கிய விருதுகளை நிறுவிய சீக்கிய இயக்குநரக நிறுவனத்தின் நிறுவனர் நவ்தீப் சிங்கை இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில் அவர் கேட்டு கொண்டார்.

0 comments:
Post a Comment