அதிவேக கார் தயாரித்த சுவிட்சர்லாந்து மாணவர்கள்.
அதிவேக கார் தயாரித்து சுவிட்சர்லாந்து மாணவர்கள் உலக சாதனையை முறியடித்தனர்.
சுவிட்சர்லாந்து இடிஎச் ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் இணைந்து அதிவேக பந்தய கார் தயாரித்துள்ளனர். இது அதிவேகமாக பாய்ந்து செல்லக்கூடியது.
இக்கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது. இந்த வேகத்தை 1.785 வினாடிகளில் பெறக்கூடிய திறன் கொண்டது.
இதற்கு முன்பு டெல்ப்ட் தொழில் நுட்ப பல்கலைக் கழக மாணவர்கள் அதிவேக பந்தய கார் தயாரித்து உலக சாதனை படைத்து இருந்தனர். அது 2.134 வினாடிகள் நேரத்தில் மணிக்கு 0 முதல் 100 கி.மீட்டர் வேகம் எடுக்கக்கூடிய திறன் கொண்டதாக இருந்தது.
தற்போது இதே வேகத்தை 1.785 வினாடிகளில் எடுக்கும் திறன் படைத்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய உலக சாதனையை சுவிட்சர்லாந்து மாணவர்கள் முறியடித்துள்ளனர்.
இந்த புதிய சாதனை துபன்ட்ரோட் விமானப்படை தளத்தில் நிகழ்த்தப்பட்டது. இது ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இதை தயாரிக்கும் பணியில் 30 மாணவர்கள் ஈடுபட்டனர்.
168 கிலோ எடையுள்ள இந்த காரை வடிவமைக்க ஒரு வருடத்துக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டனர். அதன் என்ஜினும், 4 சக்கரங்களும் அதிவேகமாக பாய்ந்து செல்லும் வகையில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment