பேஸ்புக்கும் ஹெக் செய்யப்பட்டது

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஹெக் செய்யப்பட்டதாக பேஸ்புக் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பேஸ்புக்கினைக்கு குறி வைத்து ஹெக்கிங் நடவடிக்கைகளில் ஹெக்கர்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்தே பேஸ்புக் நிறுவனம் மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் பணியாளர்கள் சிலர் மொபைல் மேம்படுத்தல் இணையத்தளத்தில் நுழைந்துள்ளனர். இதன்போது குறித்த பணியாளர்களின் மடிக்கணனிகளில் மல்வெயா இன்ஸ்டோல் ஆகிவிட்டது.

ஆனால் இதன் போது பேஸ்புக் பயன்களின் எந்தத் தகவல்களும் திருட்டுப்போகவில்லை மேலும் அப்போதே நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை சீர் செய்துவிட்டதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாவா மென்பொருளில் ஏற்பட்ட குறைபாட்டினாலேயே ஹெக்கர்ஸ் பேஸ்புக் வலையமைப்பினுள் நுழைந்தது எனவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ட்விட்டர் இணையத்தளம் ஹெக் செய்யபட்டு 250 ஆயரம் பயனர்களின் கடவுச்சொல், பயனர் குறிப்புக்கள் உள்ளடங்கலான அனைத்து விடயங்களும் திருடப்பட்டமையை ட்விட்டர் நிறுவனம் தெரிவிருந்தது.

இந்த ஹெக்கிங் நடவடிக்கைகளுக்க சீனாவே காரணமென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளது.

குறித்த ஹெக் சம்பவத்தினை உடனடியாக வெளியிடாமல் சுமார் ஒரு மாதம் காலம் தாழ்த்தி வெளியிட்டது ஏன்? என்ற கேள்விக்கு பேஸ்புக் நிறுவனம் கருத்துக் கூற மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment