நாங்களும் ஹெக் செய்யப்பட்டோம் : அப்பிள்

அப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரின் மடிக்கணனிகள் கடந்த செவ்வாய்க் கிழமை ஹெக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

​அப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் மேம்படுத்தல் இணையத்தளங்களுக்கு பிரவேசித்துள்ளனர். இதன்போது ஜாவா பிளக் இன் அவர்களது மடிக்கணனிகளில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மல்வெயாக்கள் சில அவர்களது மெக் மடிக்கணனிகளை தாக்கியுள்ளது. 

இருப்பினும் குறித்த மெல்வெயாக்களினால் எந்தவொரு தகவலும் களவாடப்படவில்லை. நாங்கள் இந்த மல்வெயாக்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டுகொண்டோம் என அப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆனாலும் இந்த ஹெக் சம்பம் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பில் அப்பிள் நிறுவனம் கருத்து வெளியிடவில்லை.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனமானது, அவர்களுடைய இயங்குதளத்திற்கென பிரத்தியேகமான ஒரு ஜாவா பெட்ச் ஒன்றினை தரவேற்றம் செய்ய அறிவுறுத்தியது. இதன் மூலம் மெக் இயங்குதளங்களிலுள்ள மல்வெயாக்களை நீக்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற இணையத்தளங்களும் இதே போன்றே ஹெக் செய்யப்பட்டிருந்தது. 

அண்மைக்காலமாக அமெரிக்காவை குறிவைத்து ஏராளமான ஹெக்கிங் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment