கண்கள் பாதிப்பும், அவற்றுக்கான தீர்வுகளும்

கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்  அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார்  கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி.

சிறு­வ­ய­தி­லேயே கண் பார்வை குறை­வ­டைந்து போவ­தற்­கான காரணம் என்ன?

தாய் வயிற்றில் சிசு இருக்­கையில் ஏதா­வது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்­புள்­ளது.  அதில் (TORCH)  என சொல்லப்படும் நோய்கள் சின்­னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கரு­த­ரித்து மூன்று மாதங்களுக்குள்  நோய் தொற்று ஏற்பட்டால் பிள்­ளையின் கண் பாதிக்க வாய்ப்­புள்­ளது. தாயும் தந்­தையும் நெருங்­கிய உறவில் திரு­மணம் செய்­தி­ருந்தால்  குழந்தைகளுக்கு கண்பார்வை பிறப்பிலேயே குறைய வாய்ப்புள்ளது. 

பெற்றோர் சிறுவயதில் கண்ணாடி பாவித்தவர்களாக இருந்தால் குழந்தை களும் பாவிக்கவேண்டியுள்ளது. சில வேளையில் தாய் கர்ப்பம் தரித்­தி­ருக்­கையில், முதல் மூன்று மாதங்­களில் அதிக மது அருந்­துதல் (அல்­கக்கோல்) புகை­பி­டித்தல் மூலம் குழந்­தையின் கண் ­பார்வை இழக்க நேரி­டலாம். விற்­றமின் குறை­பாட்­டி­னாலும் கண்ணின் வளர்ச்சி பாதிப்ப­டைய வாய்ப்­புள்­ளது. அத்­தோடு குழந்தை தாய் வயிற்­றி­லி­ருந்து வெளி­யேறும் போது பிறப்பு உறுப்­புக்­களில் கிருமி தொற்று காரணமாக தாக்­கு­த­லாலும் குழந்தை பிறந்த பிறகு கண்கள் சிவந்து பார்வை இழக்க வாய்ப்­புண்டு.

பிள்­ளை­களின் பழக்க வழக்கம், பிள்­ளைகள் தொடர்ச்­சியாக கிட்ட பார்­வைக்கு இசை­வாக்கப்படுதல் பாதிப்பு நேரிடலாம். மயோ பியா என்ற பார்வை குறை­பாடு வர­வாய்ப்­புள்­ளது. வாக்கு கண் என்­பது ஒரு கண்ணின் பார்­வையை குறைக்கும். வாக்கு கண் உள்­ள­வர்­களை செல்­ல­வாக்கு என்று எண்­ணாது வைத்­தி­யரை நாட­வேண்டும். ஏனென்றால் சிறுவர்களிடையே தலை சரிந்துப் பார்ப்பது போன்ற குறைபாடுகள் இருக்கலாம். இந்த கண்­ணுள்­ள­வர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக கண்­பா­திக்க வாய்­ப்புள்­ளது.         
கண்­களில் வெள்ளை படர்­வ­தற்­கான         காரணம் என்ன? 

பிரதான காரணம் வயது போகப் போக கண்­களில் உள்ள லென்ஸி­லுள்ள செல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்­கி­றது.  செல்ஸ் தள்­ளு­பட்­டு கொண்­டி­ருக்­கையில், பின்­பக்கம் நார்­க­ளாக வளர்ந்து கண்­களில் படர்­கி­றது. அல்ட்டா வைலட் கதிர்கள் கண்­களில் பட கண்­களில் நிற­மாற வாய்ப்­புள்­ளது. steroid மருந்து வகை­களை பாவிப்­ப­த­னாலும் கெட் ரெக் வர­வாய்ப்­புள்­ளது.

மின்னல் தாக்­குதல் சடுதியாக குளுக்­கோமா காரணமாகவும் தாய்மார் வயிற்றில் குழந்­தைகள் இருக்கும் போது ஏதா­வது தொற்றுநோய் கார­ண­மாக கெட் ரெக் வர வாய்ப்­புள்­ளது. அதி­க­மாக 55  மேற்பட்ட வய­தி­ன­ருக்கே  உடல் அமைப்புக்கு ஏற்­ற­வகையில் ஏற்­ப­டலாம். சிறு­வ­ய­திலே steroid  மருந்­து­களை பாவிக்கும் போதும், சிறுநீரக நோய்க்­கான மருந்­து­களை பாவிக்கும்  போது கெட் ரெக் வரவாய்ப்புள்­ளது. கெமிக்கல் கண்­க­ளுக்கு படு­வதால் கெட் ரெக் சிறு­வ­ய­திலே வர­வாய்ப்­புள்­ளது. பிறக்கும் சிறு குழந்­தை­க­ளுக்கும் கெட் ரெக் வரலாம். 

கண்­களைச் சுற்றி கரு­வ­ளையம் தோன்­று­வ­தற்கும் கண்­ணுக்கும் தொடர்பு உண்டா?

கண் பகு­தியை சுற்றி உள்ள தோல் பகுதி மிகவும் மென்­மை­யா­னது. உடலில் உள்ள ஏனை­ய ப­கு­தி­களை போல தடிப்­பா­னது இல்லை. இது மிகவும் மென்­மை­தன்மை ஒளி உட்செல்லவிடும்  தன்மை கொண்­டது.

உட­லி­லுள்ள இரத்­தோட்­டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக சொன்னால், கண்­களில் ஏற்­படும் கரு­வ­ளை­ய­மானது தெரிவது  இது பரம்­ப­ரை­யா­கும். ஒவ்­வொ­ரு­வரின் எலும்பின் அமைப்பை பொறுத்து அதா­வது கற்குழியைப் பொறுத்து அதன் தோற்­ற­­மைப்பு மாறு­படும். கண்ணில் அழற்சி மற்­றது கண்கடி ஏற்­ப­டுதல், கண்கள் வறட்சி அடைதல், கண்­களில் அழற்சி ஏற்­ப­டு­வதால்  அடிக்­கடி கண்­களை கச­க்­கு­வதால் இதன் காரணமாக கண்­களில் தடிப்பு ஏற்­பட்டு கண்­களில் கரு­வ­ளையம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. கண்­ணுக்கு கண்­ணாடி தேவை­யேற்­படும் போது கண்­ணாடி பாவிக்­காமை,  தூக்­க­மின்மை, உடம்பில் இரத்த ஓட்டம் குறை­வ­டைதல், உடம்பில் நீர்த்­தன்மை குறை­வ­டைதல்,  மருந்­துகள் (குளுக்­கோமா), தொடர்ந்து கணினி முன் நின்று வேலை செய்தல், நித்திரை குறை­வ­டை­தல் போன்ற கார­ணங்­க­ளினால் கண்­களில் கரு­வ­ளையம் தோன்ற கார­ண­மாக அமை­யலாம். 

கண் மஞ்சள் நிற­மாகத் தோன்­று­வ­தற்­கான காரணம் என்ன?

மஞ்சள் காமாலை, செங்­க­ன்மாரி இருப்­பதை அறிந்து கொள்­ளலாம். அத்­தோடு நோயுள்ளவர் கழிக்கும் சிறுநீர் மஞ்சள் நிற­மாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். பொது­வாக கண்­களில் வெள்­ளை­ நிறமான மையப் ­ப­கு­தியில் மஞ்சள் நிற­மாக இருப்­ப­தற்கு காரணம் சூரிய ஒளியின் அல்டா வைலட் காரண­மாக மஞ்சள் நிற­மாக வரவாய்ப்­புள்­ளது. கண்­களின் வெள்ளைப்­ப­கு­தியில் கரு திட்­டுகள் இருப்­பதால் மஞ்சள் நிற தோற்­ற­ம­ளிக்­கி­றது. எல்லா இடங்­க­ளிலும் சுத்­த­மான மஞ்­ச­ளாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். அல்டா வைலட் பாதிப்பாக இருந்தால் பொது­வாக சன்­கிளாஸ், தொப்பி, குடை பாவித்தல் மூலம் இதனை கட்­டு­ப்ப­டுத்­தலாம். 

கண் சிவப்­ப­தற்­கான காரணம் என்ன?

கண் சிவப்­பாக மாற பல கார­ணங்கள் உண்டு. ஆனால் அதில் முக்­கி­ய­மாக கவனிக்க வேண்­டி­யது,   கண் சிவப்­பாக இருந்து கண்ணில் வேதனை இருக்­குமா என்­பதை கவ­னிக்க­வேண்டும். அதோடு பார்வை குறைபாடு உண்டா என்­பதை முக்­கி­ய­மாக கவ­னிக்­க­வேண்டும்.  கண் சிவப்­பாக இருப்­பது என்­பது அசா­தரண நிலை­யாகும். ஒரு கண் சிவந்து இருந்தால் கட்­டாயம் வைத்­தி­யரை நாட­வேண்டும்.
இரண்டு கண்­களும் சிவந்து இருந்தால் அது அவ்­வ­ள­வுக்கு பார­தூரமா­னது என்று சொல்­ல­மு­டி­யாது. ஒரு கண்ணில் ஒரு பக்­கத்தில் சிவந்து காணப்­பட்டு கடும் வலி, பார்வை குறை­பாடு காணப்­பட்டால் வைத்­தி­யரை உட­ன­டி­யாக நாட­வேண்டும்.

இப்படியான சந்தர்ப்பத்தில் ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் அதன் பாதிப்பு அதி­க­ரித்து செல்­வதால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். இப்­ப­டி­பட்ட வேதனை இருக்­கு­மானால் இக்                கு­ளு­மி­யா­வாக இருக்­கலாம். சாதா­ர­ண­மாக கண் சிவப்­பது தொற்றுநோய் அல்­லது நோயா­கவும் இருக்­கலாம்.  இது கடு­மை­யான வேதனை வந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாடவேண்டும். புரை தள்ளி தண்ணீர் வந்­த­து என்றால், அது கண்­நோ­யாகத் தான் இருக்கும். அதை­வி­டவும் கண்ணில் இரத்த கசிவு கார­ண­மா­கவும் கண் சிவக்கலாம் அல்­லது அது சடு­தி­யாக அல்டா வைலட் கதிர்­வீச்சு கண்ணில் படு­வதால் கண்­களின் இரு பக்­கமும் நடுவில் கோடு­க­ளாக தெரியும்.

மாலைக்கண் நோய்க்­கான காரணம் என்ன?

இரவு பார்வை குறை­வாக இருப்­பது மாலைக்கண் நோய் இதை plterygium என்று சொல்லாம். குளுக்­கோமாவுக்கு போடும் மருந்துகளால் சில சமயம் இரவு பார்வை பாதிக்கலாம். இரவு பார்­வைக்கு பொது­வான காரணம் ரெகி நை பிக்மன்ட் டோசா. விழித்­தி­ரையில் பிறப்பால் அல்­லது பரம்­ப­ரையால் கண்ணில் சில மாறு­பா­டுகள் வரு­வதால் இது பெற்­றோர்­களால் பிள்­ளை­க­ளுக்கு வர­வாய்ப்­புள்­ளது இது பரம்­பரை நோயாக அமை­யும். இந்நோய் வரும்­போது காது கேட்­காமல் போகவும் வாய்­ப் புள்­ளது. 

50-–55 வய­தின­ருக்கு வெள்ளை படி­வதால் இரவு பார்­வையை பாதிக்­கி­றது.  இரவு நேரங்­களில் வாக­னங்கள் செலுத்தும் போது கெட் ரெக் இரவு கண்­பார்வை பாதிப்­ப­டைய செய்­கி­றது.

மயோ­பியா திருத்­த­ப்ப­டாமல் இருக்­கையில், தூர பார்­வை தெரி­யாமல் இருக்­கலாம். இதனால் இரவில் பார்வை குறை­வாக இருக்­கலாம். குளுக்­கோ­மா­வுக்கு போடப்­படும் மருந்­துகள் கண்ணின் கரு­ம­ணியை பாதிக்கலாம். 

லென்ஸ் போடு­வதால் கண்­க­ளுக்கு ஏதா­வது பாதிப்­பு ஏற்படுமா-?

லென்ஸ் பல வகை­யா­னது. இதில் முக்­கி­ய­மா­னது இரண்டு. கென்டேக் லென்ஸ் Intra ocular lens கென்டேக் லென்ஸ் என்­பது கண்  கருமணியில் கண்­ணுக்கு மேலே போட்டு கழற்று­வது.

கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் Intra ocular lens கண்­ணுக்குள் நிரந்­த­ர­மாக போடப்­ப­டு­கின்­றது. கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் தடித்த கிளாசை முன்பு போட்­டார்கள் ஆனால் இப்­போது Intra ocular lens கண்­ணுக்குள் போடு­கி­றார்கள். கண்­களை அறுவைச் சிகிச்சை செய்த பின் கண்­க­ளுக்குள்ளே லென்ஸ்களை மடித்து போடப்­ப­டு­கின்­றன. இன்­றைய காலத்தின் தேவையை பொறுத்து அமை­கி­றது. நாம் போடும் லென்ஸின்  தரத்தை பொறுத்து சிறு சிறு பிரச்­சி­னைகள் வரலாம். 

ஒரு­பி­ரச்­சி­னையும் இல்­லாதவர்களுக்கு  அறு­வைச் ­கிச்சை செய்தால் மறு­நாளே சரி­யா­கிவிடும். ஏதா­வது பிரச்­சி­னைகள் இருப்பின் நாட்கள் தள்ளி போக வாய்ப்­புள்­ளது.  சாதாரண நிலைக்கு  வர ஒரு மாத­காலம் தேவைப்­படும். கெட் ரெக் லென்ஸ் என்­பது கண்­ம­ணிக்கு மேலே போடு­வது. கண் கரு­ம­ணிக்கு கடத்­தப்­ப­டு­கின்ற ஒக்­சிசன் பாதிக்க வாய்ப்­புள்­ளது. இது குறிப்­பிட்ட மணித்­தி­யாலங்­க­ளுக்கு மாத்­திரம் பாவிக்க வேண்டும். உதா­ர­ண­மாக ஒரு லென்ஸ் எட்டு மணித்­தி­யாலம் மாத்­திரம் பாவிக்கவேண்டும் என்ற கால­வ­ரைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் அதை கருத்­தி­ல்கொள்­ளாது.  சோம்பல் கார­ணமாக லென்ஸைக் நீக்­காமல்  நித்­திரை செய்தால் கண்­க­ளுக்கு பாதிப்பு வர­வாய்ப்­புள்­ளது. அதற்கு சுத்தம் செய்வதற்கான திரவங்கள் உள்­ளது. அந்த திரவியத்தை கவ­ன­மாக பாவிக்­க­வேண்டும். அதை கவனக் குறை­வாக பாவித்தால் கண்­களில் தொற்று நோய் வர­வாய்ப்­புள்­ளது. அதை தவி­ரவும், கண்­களில் பொருத்தப்பட்ட லென்ஸ் நாளாக நாளாக ஒரு மாதத்தில் அல்­லது மூன்று மாத்­திற்கு பாவிக்­கலாம். இது நாட்­பட பாதிப்பு ஏற்­பட வாய்­ப்புள்­ளது. நாம் போடும் லென்ஸுக்கு திரவங்கள் போடு­வதால் கண்­களில் அழற்சி வர கார­ண­மாக அமை­கின்­றது, ஒரு சில­ருக்கு லென்ஸ் போடு­வதால் நல்ல பார்வை வரும் என்­பதை அறிந்த பின் அந்த நோயா­ளிக்கு Intra ocular lendலென்ஸ் பாவிப்­பது நல்­லது.
லென்ஸுக்கு பின்னால் ஒரு­ படல் மாதிரி பட­ர­ வாய்­புள்­ளது. இதை ஒரு லெசரால் குணப்­ப­டுத்­த­ மு­டியும். இள­மை­யாக உள்­ள­வர்­க­ளுக்கு அடிக்­கடி லெசரால் குணப்­ப­டுத்த வேண்டும். வயது போன­வர்­க­ளுக்கு குறை­வாக படர வாய்ப்­புள்­ளது. 

0 comments:

Post a Comment