தோல் நோய்களுக்கு உகந்த 'ப்ளேட்லட் ரிச் பிளாஸ்மா.

முன்பெல்லாம் இளம்வயதினரைத்தான் அதிக அளவில் முகப்பருக்கள் தாக்கும். தற்போது ஆறு முதல்அறுபது வயதினரை கூட இவை தாக்குகிறது. காரணம் தற்போதைய உணவு முறை மாற்றம். பாஸ்ட் புட்டை தொடர்ந்தோ அல்லது அடிக்கடி எடுத்துக்கொள்வது, அதனையும் காலந்தவறி உண்பது, கொழுப்பு சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வது, முகத்தில் பருக்கள் தோன்றிவிட்டால் அதனை கையிலுள்ள நகத்தால் கீறி விடுவது, சந்தையில் கிடைக்கும் மலிவான கிறீம்களை பூசிக்கொள்வது, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டில் நிகழும் சமச்சீரற்ற தன்மை, பொடுகு தொல்லை போன்ற பல காரணங்களால் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன. 


இவற்றுள் எந்தக் காரணமாக இருந்தாலும், பருக்களைக் களைவதற்கு நவீன சிகிச்சைகள் வந்துள்ளன. முகப்பருக்கள் மட்டுமின்றி முகத்தின் அழகிய உருவத்தை சிதைக்கும் எந்த எதிர்விளைவையும் தற்போதைய நவீன சிகிச்சைகளால் சீரமைக்க இயலும். இதற்காக கெமிக்கல் பீல், றேடியோ எலக்ட்றோ சத்திர சிகிச்சை, மைக்றோ டெர்மாபிறாசன், ஸ்கார் ரிவிசன், வார்ட் ரிமுவல் என பல நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக பி.ஆர்.பி. எனப்படும் ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மா ட்ரீட்மெண்ட், அதாவது இரத்தத் தட்டுகள் நிறைந்த பிளாஸ்மா சிகிக்சை மூலம் முகத்தின் பொலிவு கிட்டத்தட்ட நூறு சதவீதம் திரும்பக் கிடைக்கப்பெறும். அதே நேரத்தில் எந்த காரணம் கொண்டும் முகப்பருவிற்கு உடனடியாக நிவாரணம் தரும் ஸ்டீரொய்ட் சிகிச்சையை ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது. 

சருமத்தை பாதிக்கும் நோயான சொரியாஸிஸைப் பொறுத்தவரையில், மருத்துவ சிகிச்சை மட்டும் பலன் தராது. சிகிச்சையின் பின்னரும் நோயாளியின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தால் மட்டுமே சாத்தியப்படும். சொரியாஸிஸ{க்கும் தற்போது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. குறிப்பாக, ஹ்யூமன் லீக்கியோசைட் என்டிஜேன் HLA B 27 என்ற பரிசோதனை மூலம் இதற்கான தீர்வைக் கண்டறியலாம். 

திராவக வீச்சுக்கு ஆளானவர்களுக்கு, அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை கண்டறிந்து பல வித கூட்டு சிகிச்சை மூலம் அவர்களின் தோற்றத்தை சீரமைக்க இயலும். இதற்கான பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. இதனைத் தவிர தீக்காயம் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் ஏற்படும் விபத்துகளால் உருவாகும் தழும்புகளின் இயல்பை கூட தொடர் சிகிச்சை மூலம் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். 

0 comments:

Post a Comment