ஜேம்ஸ்பொண்ட் புகழ் பியர்ஸ் பிரஸ்னன் உளவாளியாக நடித்த புதிய திரைப்படம்
ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பியர்ஸ் பிரஸ்னன், மற்றொரு புலனாய்வாளர் பாத்திரத்தில் நடித்த "த நவம்பர் மேன்" எனும் இப்படம் அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. 
அக் ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ரொஜர் டொனால்ட்சன் இயக்கியுள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான "குவாண்டம் ஒப் சோலாஸ்" எனும் ஜோம்ஸ்பொண்ட் படத்தில் நடித்த பிரெஞ்சு நடிகை ஒல்கா குரிலென்கோவும் "த நவம்பர் மேன்" படத்தில் நடித்துள்ளார்.
61 வயதான பியர்ஸ் பிரான்ஸன், கோல்டன் ஐ (1995), டுமாரோ நெவர் டைஸ் (1997), த வேர்ல்ட் இஸ் நொட் இனொவ் (1999), டை அனொதர் டே (2002) ஆகிய ஜேம்ஸ்பொன்ட் படங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
12 வருட இடைவெளிக்குப் பின்னர் உளவாளியாக அக் ஷன் படமொன்றில் நடிப்பது மிக சவாலானது எனவும் இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் பியர்ஸ் பிரஸ்னன் தெரிவித்துள்ளார்.











0 comments:
Post a Comment