ஐ.நா. தூதுவரானார் லியனார்டோ

ட்­டானிக்" திரைப்­பட புகழ் ஹொலிவூட் நடிகர் லிய­னார்டோ டிகெப்­ரியோ, ஐ.நாவின் கால­நி­லைக்­கான அமைதித் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனினால்  டிகெப்­ரியோ இப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் 23 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள கால­நிலை தொடர்­பான ஐ.நாவின் உச்­சி­மா­நாட்டில் லிய­னார்டோ டி கெப்­ரியோ உரை­யாற்­றுவார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

"லிய­னார்டோ உலகின் முன்­னிலை நடி­கர்­களில் ஒருவர் மாத்­தி­ர­மல்ல. அவர் சுற்­றாடல் விவ­கா­ரங்­களில் நீண்­ட­கா­ல­மாக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­பவர்" என பான் கீ மூன் தெரி­வித்­துள்ளார்.

1998 ஆம் ஆண்டு சுற்­றாடல் பாது­காப்­புக்­கான லிய­னார்டோ டிகெப்­ரியோ மன்றம் எனும் அமைப்பை லிய­னார்டோ ஸ்தாபித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. நேபா­ளத்­தி­லுள்ள புலிகள், காட்­டு­யா­னைகள், கடல்வாழ் உயி­ரி­னங்கள் முதலானவற்றை பாதுகாப்பதற்கு லியனார்டோவின் மன்றம் நிதியுதவி வழங்குகிறது.

0 comments:

Post a Comment