அவதார் வழக்கில் ஜேம்ஸ் கெமரூனுக்கு வெற்றி

அவதார் படத்துக்கு தனது ஓவியமொன்றை அனுமதியில்லாமல் பயன்படுத்திவிட்டதாகக் கூறி அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கெமரூனுக்கு எதிராக ஓவியர் ஒருவரினால்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றமொன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஓவியர் ரோஜர் டீன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிபதி இந்த வழக்கை நிராகித்தார். மனுதாரரான ஓவியர் ரொஜர் டீன் தனது வாதத்துக்கான ஆதாரங்களாக முன்வைத்த சாட்சியங்களும் அவதார் திரைப்படத்திலிருந்து அல்லாமல் அவதார் குறித்த புத்தங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 

அவதார் திரைப்படம் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தாலும் அப்படம் வெளியானதிலிருந்து பல வழக்குகளை ஜேம்ஸ் கெமரூன் எதிர்கொண்டு வருகிறார்.

விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளரான பிரையன்ட் மூர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் எலிஜா ஷ்கெய்பன் ஆகியோரும் தமது படைப்புகளின் காப்புரிமையை ஜேம்ஸ் கெமரூன் மீறிவிட்தாக கூறி வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment