ஸ்னோடன் வேடத்தில் ஜோசப் லெவிட்?

அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு முக­வ­ரத்தின் இர­க­சிய ஆவ­ணங்­களை வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய முக­வ­ர­கத்தின் முன்னாள் ஊழி­ய­ரான எட்வேர்ட் ஸ்னோடனின் வேடத்தில் நடிகர் ஜோசப் ஜோர்டன் லெவிட்டை நடிக்க வைப்­ப­தற்கு இயக்­குநர் ஒலிவர் ஸ்டோன் முயற்­சிக்­கிறார்.

எட்வர்ட் ஸ்னோடனை உலக மக்­களில் பலர் ஹீரோ­வாக நோக்­கு­கின்­றனர்.
அமெ­ரிக்க அரசு அவரை துரோ­கி­யா­கவும் வில்­ல­னாக பார்க்­கி­றது. இந்­நிலையில் எட்வர்ட் ஸ்னோடனை சித்­திரிக்கும் பட­மொன்றை இயக்­குநர் ஒலிவர் ஸ்டோன் இயக்­க­வுள்ளார். 

இப்­ப­டத்தில் ஸ்னோடன் வேடத்தில் நடிப்­ப­தற்கு தனது முதல் தெரிவு ஜோசப் லெவிட்தான் என இயக்­குநர் ஒலிவர் ஸ்டோன் தெரி­வித்­துள்ளார். 

இப்­ப­டத்தை தயாரிப் ­ப­தற்­காக ஒலிவர் ஸ்டோ னும் தயா­ரிப்­பா­ள­ர்­களில் ஒரு­வ­ரான மோரிட்ஸ் போர்­மனும் எட்வர்ட் ஸ்னோடனின் ரஷ்ய சட்­டத்­த­ரணி மூலம் ஒப்­பந்­த­மொன்­றையும் செய்­து­கொண்­டுள்­ளனர். 

இப்­ப­டத்­துக்கு இன்னும் பெய­ரி­டப்­ப­ட­வி ல்லை. 

எதிர்­வரும் டிசெம்பர் மாதம் ஜேர்­ம­னியின் மூனிச் நகரில் இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பை ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்­ளது.

33 வய­தான நடிகர் ஜோசப் ஜோர்டான் லெவிட் தற்போது இயக்குநர் ஜொனதன் லெவின் இயக்கும் பெய ரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment