தயாரிப்புச் செலவை எகிற வைக்கும் Hobbit-3
Hobbit 3 படத்துக்கான செலவு எக்கச்சக்கமாக எகிறிக்கொண்டு போகிறதாம். ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் வெளிவந்த ஹோபிட் படங்களின் தொடர்ச்சியாக ஹோபிட்: த பெட்டில் ஒவ் த பைவ் ஆர்மீஸ் எனும் படம் தயாரிக்கப்படுகிறது
எதிர்வரும் டிசெம்பர் மாதம் இப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், இம்மாதம் நியூஸிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின்படி இப்படத்துக்கு கடந்த மார்ச் மாதம்வரை 745 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 9,728 கோடி ரூபா) செலவிடப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு, டிஜிட்டல் எபெக்ட்ஸ் போன்றவற்றுக்கான செலவுகள் இவற்றில் அடங்கும். ஆனால் இறுதி 8 மாத கால தயாரிப்புச் செலவு உள்ளடக்கப்படவில்லை.
உலகளாவிய ரீதியிலான சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக செலவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா-? என்பது தெரியவில்லை. இப்படத்தை தயாரிக்கும் வோர்ணர் பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தின் செலவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு மறுத்துள்ளது.
"தயாரிப்புச் செலவுகள் குறித்து நாம் கருத்து தெரிவிப்பதில்லை என அந்நிறுவனத்தின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரான கென்டீஸ் மெக்டொனோ தெரிவித்துள்ளார்.
ஹோபிட் படவரிசையின் முதல் இரு படங்களும் மொத்தமாக 198 கோடி டொலர் தயாரிக்கப்பட்டதாக மதிப்படப்பட்டுள்ளது.











0 comments:
Post a Comment