ஸ்டீவ் ஜொப்ஸ் படத்திலிருந்து லியனார்டோ விலகினார்

அப்பிள் நிறு­வ­னத்தின் இணை ஸ்தாப­க­ரான ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்க்கை குறித்த படத்­தி­லி­ருந்து நடிகர் லிய­னார்டோ டி கெப்­ரியோ வில­கி­யுள்ளார். 

டெனி போய்ல் இயக்கும் இப்­ப­டத்தில் ஸ்டீவ் ஜொப்ஸ் வேடத்தில் நடிப்­ப­தற்கு லிய­னார்­டோவை ஒப்­பந்தம் செய்ய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
 
அவர் தற்­போது நடிக்கும் த ரெவனன்ட் படத்தின் பின்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் படத்தில் லிய­னார்டோ நடிப்பார் என முன்னர் கூறப்­பட்­டது. 

ஆனால், அடுத்த வருடம் வெளி­வ­ர­வுள்ள ரெவனன்ட் படத்தின் பின்னர் நடிப்­பி­லி­ருந்து நீண்­ட­காலம் ஓய்­வெ­டுப்­ப­தற்கு லிய­னார்டோ தீர்­மா­னித்­துள்ளார்.
இதனால், ஸ்டீவ் ஜொப்ஸ் குறித்த படத்தில் லிய­னார்டோ நடிக்­க­மாட்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனால் கிறிஸ்­டியன் பேல், மெட் டெமோன், பிரட்லி கூப்பர், பென் அப்லெக் ஆகி­யோரில் ஒருவர் இப்­ப­டத்தில் நடிக்­கக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கடந்த வரு­டமும் ஸ்டீவ் ஜொப்ஸ் குறித்த "ஜொப்ஸ்" எனும் படம் வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஜோஸ்வா மைக்கல் ஸ்டேர்ன் இயக்­கிய அப்படத்தில் ஸ்டீவ் ஜொப்ஸ் வேடத்தில் அஷ்டன் குச்சர் நடித்திருந்தார்.
-

0 comments:

Post a Comment