உலகின் மிக மெல்லிய ஐபாட் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் (video)
உலகின் மிக மெல்லிய ஐபேட் ஐபாட் ஒன்றை அப்பிள் நிறுவனம் நேற்று வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபாட் எயார் 2 (iPad Air) என்ற பெயர் கொண்ட இந்த ஐபேட் 6.1 மில்லி மீற்றர் அகலமே இருக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த புதிய வகை ஐபேட் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mac OS software வசதி கொண்ட இந்த ஐபாட் , உலகின் மிக அதிகமான ‘ஹை’ ரெசலூசன்’ திறன் கொண்டுள்ளது.
மேலும் இதன் சிறப்பு அம்சங்களானவ :
மேலும் இதன் சிறப்பு அம்சங்களானவ :
6.1 மில்லி மீற்றர் அகலம் (இதற்கு முன்னர் வெளிவந்த ஐபாட் எயார் அளவை விட இது 18 மடங்கு மெல்லியது), 9.7 அங்குல திரை, 8 மெகாபிக்சல் கொண்ட கமரா, 10 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியுமான பட்டரி திறன், சில்வர், கிரே மற்றும் கோல்ட நிறங்களில் கிடைக்கக்கூடிய வசதி என்பன இதில் அடங்குகின்றன.
இதேவேளை இந்த புதிய ஐபாட் ஆனது இணையங்களில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. $499 முதல் $699 வரையான விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











0 comments:
Post a Comment