பேஸ்புக் நிறுவுனரின் இந்திய விஜயத்தின் நோக்கம் என்ன?.


லகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் நிறுவுனர் மார்க் சூக்கர்பேர்க் இந்தியாவுக்கான விஜயமொன்றை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.


இந்தியத் தலைநகர் டில்லியின் நடைபெறவுள்ள சர்வதேச இணையத்தள செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ள அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதன் பிரதான அங்கமாக பிரதமர் நரேந்திர மோடியை இன்றைய தினம் அவர் சந்திக்கவுள்ளதுடன் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்புகளில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பேஸ்புக்கின் தீவிரமான உபயோகம் இந்தியாவில் தான் காணப்படுகிறது. அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலையமைப்புகளின் ஆதிக்கம் மற்றும் பயன்பாடு குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களின் உபயோகம் குறித்து உரையாற்றியிருந்தமையை இங்கு நினைவுபடுத்தலாம்.

இந்நிலையில் இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய இணையத்துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

0 comments:

Post a Comment